திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம்

From Wikipedia, the free encyclopedia

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம்
Remove ads

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் (GOVERNMENT MUSEUM, TIRUNELVELI) என்பது தமிழ்நாட்டில் அருங்காட்சியகத்துறையால் பராமரிக்கப்பட்டு வரும் இருபது மாவட்ட அருங்காட்சியகங்களில் ஒன்றாகும்.[1] திருநெல்வேலி மாவட்டத்தின் தலைமையகமான திருநெல்வேலியில் இவ்வருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அரசுக்குச் சொந்தமான கட்டிடத்தில் செயற்பட்டுவரும் இக்காட்சியகத்தில், சிற்பப் பூங்கா, சிறுவர் பூங்கா, அறிமுகக் கூடம், மானுடவியல் கூடம், தொல்லியல் கூடம், இயற்கை அறிவியல் கூடம், ஓவியக் கூடம் என ஐந்து காட்சிக்கூடங்கள் உள்ளன.

Thumb
திருநெல்வேலி அரசு அருங்காட்சியக நுழைவாயில்
Remove ads

அமைவிடம்

Thumb
தற்போது அருங்காட்சியகமுள்ள கட்டிடத்தின் பழைய தோற்றம்

திருநெல்வேலி புனித மார்க் தெருவில், காவற்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அருகில் அரசுக்குச் சொந்தமான கட்டிடத்தில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. காட்சியகம் அமைந்துள்ள கட்டிடம் பழமையானது. ஊமைத்துரை ஆங்கிலேயர்களால் சிறைவைக்கப்பட்ட இடம் மற்றும் கட்டிடத்தின் உள்ளமைந்த கூடங்களின் மேற்கூரைகளில் மீன்வடிவங்கள் காணப்படுவதால் இது பாண்டியர் காலக் கட்டிடம் என்ற கூற்று வழக்கிலுள்ளது.

Remove ads

காட்சிப் பொருட்கள்

திருநெல்வேலி மாவட்டத்தின் தொல்லியல் அகழ்வாய்வுக் களங்களிலிருந்து பெறப்பட்ட முதுமக்கள் தாழி, தானியக் குதிர், பழங்சிற்பங்களில் சதிக்கல், வீரக்கல், காளி, தேவி, மகாவீரர், சண்டிகேசுவரர், நந்தி போன்றவை, பழங்கால நாணயங்கள், கற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பல்வகை கற்கருவிகள், காட்டுநாய்க்கர், பளியர், காணி இனப் பழங்குடி மக்கள் பயன்படுத்திய பொருட்கள், பழங்கால அளவை நாழிகள், சாடிகள் எனப் பல்வகைத் தொல்பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டன. வீரபாண்டிய கட்டபொம்மன் தொடர்பான சேகரிப்புப் பொருட்கள் ஊமைத்துரைக் கூடம் என்ற தனிப்பட்ட கூடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads