திருப்பாதிரிப்புலியூர் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருப்பாதிரிப்புலியூர் தொடருந்து நிலையம் (Thirupadiripuliyur railway station, நிலையக் குறியீடு:TDPR) ஆனது இந்தியாவின், தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டத்தின் தலைமையகமான, கடலூர் நகரில் அமைந்துள்ளது இரண்டு தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். மற்றொன்று கடலூர் துறைமுகம் சந்திப்பு தொடருந்து நிலையம் ஆகும். இது தென்னக இரயில்வேயின், திருச்சிராப்பள்ளி கோட்டத்துக்கு உட்பட்டது. இது சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் முதன்மை வழித்தடத்தில் அமைந்துள்ளது.
Remove ads
அமைவிடம்
இந்த தொடருந்து நிலையம் கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூர், சுப்ராயலு நகரில் அமைந்துள்ளது. இதன் அருகிலுள்ள வானூர்தி நிலையம் புதுச்சேரியில் 23 கிலோமீட்டர் (14 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.
வழித்தடம்
இந்த நிலையம் சென்னையை, நாகப்பட்டினம், காரைக்குடி, திருவாரூர், இராமேஸ்வரம் போன்ற இடங்களுடன் இணைக்கும் முக்கிய பாதையில் அமைந்துள்ளது.
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.[2][3][4]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி தொடருந்து கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, திருப்பாதிரிப்புலியூர் தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 6.38 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[5][6][7]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads