திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில்

தமிழ்நாட்டின் இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஒரு பெருமாள் கோயில் From Wikipedia, the free encyclopedia

திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில்map
Remove ads

பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவில் என்பது தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் திருப்பாற்கடல் என்ற ஊரில் அமைந்துள்ள தொன்மை வாய்ந்த கோவிலாகும். சிவனின் ஆவுடை மீது நிற்கும் திருமால் இக்கோயிலில் அருள்பாலிக்கிறார். இது சைவ சமயத்தில் வைணவத்தின் கலவையாகும். சிவனும் விஷ்ணுவும் சமம் என்பதை இது குறிக்கிறது.

விரைவான உண்மைகள் திருப்பாற்கடல், பெயர் ...
Remove ads

சிறப்பம்சங்கள்

பண்டைய காலங்களில் கரம்பு என்று அழைக்கப்படும் திருப்பாற்கடல் கிராமம் பசுமையான சூழலுடன்கூடிய ஒர் இயற்கை வளம்மிக்க பகுதியாகும். இங்கு இரண்டு சிவன் ஆலயங்களும் இரண்டு விஷ்ணு கோவில்களும் உள்ளன. இங்கு மூலவருக்கு சொர்க்க வாசலுடன் சேர்ந்து மூன்று வாசல்கள் உள்ளன. இதனால் வைகுண்ட ஏகாதசி சமயத்தில் சொர்க்கவாசல் திறக்கும்போது நேரடியாக மூலவரையே தரிசிக்கலாம்.[1]

லிங்கத்தின் மீது திருமால்

Thumb
உற்சவர்

இக்கோயில் குறித்து நிலவும் ஒரு சுவையான கதை பின்வறுமாறு; காஞ்சிக்கு வந்த புண்டரீக மகரிஷிக்குத் திருமால்தான் விருப்பமான தெய்வம். அந்த நகரத்தில் உள்ள பல்வேறு பெருமாள் கோயில்களில் உள்ள தெய்வத் திருமேனியையும் தரிசித்தார். அருகில் உள்ள திருப்பாற்கடல் என்ற ஊரில் அற்புதமான ஆலயம் உள்ளதாக ஒருவர் கூறியதைக் கேட்டு, திருப்பாற்கடலுக்கு புண்டரீகர் கிளம்பினார். திருப்பாற்கடல் குறித்து அவருக்குத் தகவல் கூறியவருக்கு அவர் திருமால் கோயிலுக்கு மட்டுமே செல்வார் என்பது தெரியாது.

அன்று ஏகாதசி. ஏகாதசி முடிவதற்குள் திருமாலின் ஆலயம் ஒன்றுக்குச் சென்றே ஆக வேண்டுமென்று திருப்பாற்கடலுக்கு விரைந்தார். திருப்பாற்கடல் ஊரில் உள்ள கோயில் கோபுர வாயிலுக்குச் சென்றவர் உள்ளே உள்ள நந்தியின் உருவத்தைக் கண்டு உடனடியாக அங்கிருந்து வெளியேற முயன்றார். அப்போது அவரை எதிர்கொண்ட ஒரு முதியவர் கோயிலில் நுழையாமல் திரும்புவது குறித்துக் கேட்டார். அதற்கு புண்டரீகர் தான் திருமாலின் ஆலயங்களுக்கு மட்டுமேதான் செல்வதாகவும் இது சிவன் கோயிலாக இருப்பதால் திரும்புவதாக கூறினர். அதற்கு அந்த முதியவர் இது திருமாலின் ஆலயம்தான் என்று அவரை அழைத்துச் செல்வதாக கூறியதால், தன் கண்களை ஒரு துணியால் கட்டிக்கொண்டு முதியவரின் கையைப் பற்றிக்கொண்டு கோயிலுக்குள் சென்றார். கோயிலின் கருவறையில் சிவலிங்கம் காட்சி தந்தது.

கட்டப்பட்ட கண்களோடு கருவறையில் உள்ள முதன்மைத் தெய்வத்தைக் கைகளால் புண்டரீகர் தடவிப்பார்த்தார். (சிவனின் உருவத்தை தவறியும் பார்த்துவிடக் கூடாது என) தலையில் மகுடம். கைகளில் சங்கு, சக்கரம், கதை. ஒவ்வொன்றையும் தொட்டுணர்ந்த புண்டரீகர் அது திருமால்தான் என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு, கண்களைத் திறந்து பார்த்தபோது அங்கே சிவலிங்கத்தின்மீது திருமாலின் உருவம் காணப்பட்டது. அரியையும் அரனையும் ஒருசேரப் பார்த்தபோது அவரது அகக்கண் திறந்தது. தன் தவறை மன்னிக்குமாறு இறைவனை வேண்டினார்.[2]

Remove ads

கோயில் கட்டிடக்கலை

பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலின் ராஜகோபூரம் பாழடைந்த நிலையில் உள்ளது. அதனையடுத்து, கொடிமரம், புண்டிரீகா புஷ்கரணி மற்றும் பலிபீடம், ஒரு சிறிய மண்டபம் மற்றும் மகரிஷி கோபுரம் போன்றவை நம்மை வரவேற்கின்றன. கருவறைக்கு முன் உள்ள மண்டபத்தின் நுழைவாயிலருகில் தும்பிக்கை ஆழ்வார், நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார், திருமங்கை ஆழ்வர் மற்றும் பூதத்தாழ்வார் ஆகியோரின் உருவங்கள் உள்ளன.

கருவறையில் ஆவுடையாரின்மீது (சிவலிங்கத்தின்மீது) வெங்கடேச பெருமாள் அபயம் அளித்திருக்கும் கரத்துடன் காட்சியளிக்கிறார். அரியையும் அரனையும் ஒருசேரப் பார்க்கும் ஒரு அரிய காட்சியாக உள்ளது. பிரகாரத்தில் கிருஷ்ணதேவராயர், ராணி மங்கம்மாள், தளவாய் நாயக்கர் போன்றவர்கள் கைகூப்பிய நிலையில் காட்சி தருகிறார்கள். பல கோயில்களைப் புதுப்பித்த கிருஷ்ணதேவராயர் இந்தக் கோயிலையும் புதுப்பித்திருக்கிறார். மேலும் இதன் இந்தக் கோயிலில் அலர்மேல் மங்கைத் தாயார், அனுமன், கருடாழ்வார், ருக்மணி, சத்யபாமா, திருக்கச்சி நம்பியடிகள் ஆகியோரின் சன்னிதிகளையும் நிறுவினார்.

திருப்பாற்கடல் 107வது திவ்யதேசம்

Thumb
தற்போதைய நிலை

பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலைத் தவிர, திருப்பாற்கடலில் ஆதிரங்கநாதசாமி கோயில் என்று ஒன்றும் உள்ளது. இந்த இரண்டு ஆலயங்களுமே அருகருகே அமைந்துள்ளன இவை 107வது திவ்யதேசம் என்று அழைக்கப்படுபடும் இடமாக உள்ளது. தமிழ் இலக்கியத்தின் பாக்தி காலத்தில் 108 திவ்ய தேசங்கள் பற்றி பரவலாகக் கூறப்படும் சுவாரஸ்யமான செய்திகள் உள்ளன, அதாவது விஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில், 106 மட்டுமே பூமியில் அமைந்துள்ளன. திருப்பற்கடல் (107) மற்றும் பரமபதம் (108) ஆகியவை புவிக்கு வெளியே பிரபஞ்ச வெளியில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து பக்தர்களும் 108 திவ்ய தேசங்கள் அனைத்தையும் பார்க்க வேண்டுமென்று இறைவன் விரும்பினார். எனவே திருப்பற்கடலில் பெருமாள் சயனித்திருக்கும் நிலையில் காட்சியளிக்கிறார். என வைணவ அறிஞர் ஸ்ரீ மடபூசி ஆழ்வார் குறிப்பிடுகிறார்.

Remove ads

திருப்பாற்கடலின் அமைவிடம்

திருப்பாற்கடல், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவேரிப்பாக்கத்திலிருந்து 2.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து 99 கிலோ மீட்டர், வேலூரிலிருந்து - 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads