திருவலஞ்சுழி சேத்திரபாலர் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருவலஞ்சுழி சேத்திரபாலர் கோயில் என்பது கும்பகோணம்-தஞ்சாவூர் தொடருந்து பாதையில், சுவாமிமலை நிலையத்திலிருந்து வடக்கே 1-கி. மீ. தொலைவில் உள்ள திருவலஞ்சுழியில், கும்பகோணம்- தஞ்சை நெடுஞ்சாலையில் உள்ள திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில் வளாகத்தில் தென்புறத்தில் உள்ளது. இக்கோயில் சேத்திரபாலருக்கு (பைரவரின் ஒரு வடிவம்) அமைக்கப்பட்டுள்ளது.

வரலாறு
உத்தம சோழன் ஆட்சிக் காலத்தில் திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயிலில் உள்ளடக்கத் திருமேனியாய் சேத்திரபாலரை முதலாம் இராசராச சோழனின் பட்டத்தரசியான உலகமகாதேவி எனப்படும் தந்திசத்திவிடங்கி அமைத்தார். இராசராச சோழன் ஆட்சிக் கட்டிலில் ஏறிய அவரது ஆறாம் ஆட்சியாண்டில் உலகமகாதேவியால் இந்த சேத்திரபாலரை தனித் திருமுன் அமைக்கபட்டு கற்றளியாக எடுப்பித்தார் என கல்வெட்டுகள் வழியாக தெரிகிறது.[1] இதுவே சாத்திரபாலருக்கு தமிழ்நாட்டில் எடுக்கபட்ட முதல் தனிக் கோயிலாகும். இராஜராஜ சோழனின் 25 ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு இக்கோயிலின் வடபுறச் சுவரில் உள்ளது. அதில்
ஸ்ரீராஜராஜ தேவர் மகாதேவியார் தந்தி சக்தி விடங்கியாரான ஸ்ரீஒலோகமாதேவியார் உய்யக்கொண்டார் வளநாட்டுப் பாம்பூர் நாட்டுத் திருக்குடமூக்கின்பால் திருவலஞ்சுழி நாம் எடுப்பித்த திருக்கற்றளிப் பிள்ளையார் க்ஷேத்ரபால தேவர்கு...
என்ற கல்வெட்டு வசகம் இதை எடுப்பித்தது குறித்து உள்ளது.[2]
Remove ads
அமைப்பு
இக்கோயிலானது ஒரு தள விமானமும் முகமண்டபமும் கொண்டதாக மேற்குப் பார்வையாக கட்டபட்டுள்ளது. தற்போது முக மண்டபம் இல்லை. திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயிலுக்கு 25, சூலை, 1949 ஆம் ஆண்டு சென்ற ஓவியர் சில்பி அக்கோயிலை பல்வேறு கோணங்களில் வரைந்தார். அப்போது இக்கோயிலையும் வரைந்து பதிவு செய்துள்ளார். அதில் இக் கோயிலானது மரங்கள் முளைத்து சிதிலமடைந்த நிலையில் இருந்துள்ளது. கோயில் கோட்டத்தில் துவார பாலகர்கள், பிள்ளையார், ஆலமர்ச்செல்வன், தேவியுடன் எழிலுடன் உள்ள சிவபெருமான், அகத்தியர், கங்காளர், பைரவர், உமையொருபாகர், பிட்சாடனார் போன்ற தெய்வச் சிலைகள் இருந்துள்ளன. கருவறையில் இருந்த சேத்திரபாலர் தலையின் பின்புறம் எரிசுடரோடும், தலையில் பிறை சந்திரனோடும், எட்டு கைகளோடும் உள்ளார். கைகளில் திரிசூலம், வாள், வில், அம்பு, டமாருகம், மணி, கேடயம் ஆகியவற்றை ஏந்தியுள்ளார். முன் இரு கைகள் உடைந்த நிலையில் இருந்துள்ளன. ஆடையின்றி உள்ள இறைவனின் இடையிலும் கைகளிலும் பாம்புகளை அணிகலனாக அணிந்த நிலையில் இருந்துள்ளார்.[2]
பிற்காலத்தில் இங்கிருந்த சோழர் கால வேலைப்பாடுகள் மிக்க மூலவர் உள்ளிட்ட சிலைகள் அகற்றபட்டன. இக்கோயில் மூவர் சிலையானது தஞ்சாவூரில் உள்ள இராசராசன் மணிமண்டபத்தில் உள்ள கலைக்கூடத்தில் வைக்கபட்டுள்ளது. பிற சிலைகள் தஞ்சைக் கலைக்கூடம் உள்ளிட்ட இடங்களுக்குக் கொண்டு செல்லபட்டன. ஓரு தசாப்தம் முன்பு இக்கோயில் புதுப்பிக்கபட்டுள்ளது. அப்போது கருவறையில் புதியதாக செய்யபட்ட சேத்திரபாலர் சிலை வைக்கப்பட்டது.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads