திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரி (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
புனே திரைப்படக் கல்லூரி (Film and Television Institute of India (FTII) இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் புது தில்லியில் 1960-இல் துவக்கப்பட்டு, 1961-ஆண்டு முதல் திரைபடப் பயிற்சி வழங்கி வருகிறது.[2] [3] 1974-இல் இத்திரைப்படக் கல்லூரியை புனே நகரத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரி, பன்னாட்டு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனங்களின் மையமாக (International Liaison Centre of Schools of Cinema and Television) விளங்குகிறது.[4]
இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் ஒரு அலகு, அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ளது. 2011-ஆம் ஆண்டு முதல் இத்திரைப்படக் கல்லூரி பட்டங்கள் வழங்கும் தொழில்நுட்ப தன்னாட்சிக் கல்வி நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது.
Remove ads
படிப்புகள்
இத்திரைப்படக் கல்லூரி திரைப்பட இயக்கம், படத்தொகுப்பு, ஒளிப்பதிவு மற்றும் ஒலிப்பதிவு துறைகளில் மூன்றாண்டு முதுநிலை பட்டயப் படிப்புகளும்; நடிப்பு மற்றும் கலை இயக்குநர் பயிற்சியில் இரண்டு ஆண்டு பட்டயப் பயிற்சி படிப்புகளும்; கணினி வரைகலை மற்றும் அனிமேஷன் படிப்புகளில் ஒன்னறை ஆண்டு பட்டயப் படிப்புகளும் வழங்குகிறது. திரைப்பட திரைக்கதை எழுதும் பயிற்சிக்கு ஓராண்டு சான்றிதழ் படிப்பும் பயிற்றுவிக்கப்படுகிறது. மேலும் திரைபட இயக்குநர், மின்னியல் ஒளிப்பதிவு, வீடியோ படத்தொகுப்பு மற்றும் ஒலிப்பதிவு பயிற்சிக்கு ஓரான்டு பட்டமேற்படிப்பு சான்றிதழ் வழங்குகிறது.[5][6]
Remove ads
புகழ்பெற்ற பேரராசிரியர்கள்
- டேவிட் லீன்[7]
- இஸ்திவான் கால்
- மணி கவுல்
- ரித்விக் காடக்
- சத்யஜித் ராய்
- டாம் ஆல்டர்
புகழ்பெற்ற முன்னாள் மாணவர்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads