தில்லி கண்டோன்மென்ட்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தில்லி பாசறை (Delhi Cantonment) தில்லி கண்டோன்மெண்ட் என பிரபலமாக அறியப்படும் இது 1914 இல் நிறுவப்பட்டது. பிப்ரவரி 1938 வரை, கண்டோன்மென்ட் வாரியம் தில்லி கண்டோன்மென்ட் அமைப்பு என்று அறியப்பட்டது. இதன் பரப்பளவு தோராயமாக 10,521 ஏக்கர் (4,258 எக்டர்) ஆகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகை 116,352 என இருந்தது.
இது கண்டோன்மென்ட் சட்டம், 2006 [2] மூலம் நிர்வகிக்கப்படுகிறது. அதே நேரத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் பல்வேறு கொள்கை கடிதங்களும் அறிவுறுத்தல்களும் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன. வாரியம் ஒரு உள்ளூர் நகராட்சி அமைப்பாக செயல்பட்டாலும், இது புது தில்லியின் பொது பாதுகாப்பு தோட்டங்களின் இயக்குநரகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. மேலும், சண்டிகர், மேற்குக் கட்டளையின் முதன்மை இயக்குநர், பாதுகாப்பு ஆகியவற்றின் கீழ் உள்ளது. [3]
Remove ads
வரலாறு
தில்லியிலும், அகமதாபாத்திலும் உள்ள பாசறைகள் முதலில் ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்டது. தில்லி பாசறை இந்தியத் தரைப்படையின் தலைமையகமாகும். இதில் இராணுவத்தினருக்கான குழிப்பந்தாட்ட மைதானம்; பாதுகாப்பு சேவைகள் அதிகாரிகள் நிறுவனம் ; இராணுவத்தினருக்கான வீடுகள்; இராணுவம் மற்றும் விமானப்படை பொதுப் பள்ளிகள்; மேலும்பல்வேறு பாதுகாப்பு தொடர்பான நிறுவல்கள் அமைந்துள்ளன. மேலும், இராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையும் இந்திய ஆயுதப்படைகளின் மூன்றாம் நிலை மருத்துவ மையமும் இங்குள்ளது.
தில்லி கண்டோன்மென்ட் இரயில் நிலையம் என்ற ஒரு தொடருந்து நிலையம் உள்ளது. அங்கிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு தொடர் வண்டிகள் புறப்படுகின்றன.
Remove ads
மக்கள்தொகையியல்
2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் [4] இது 124,452 மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. மக்கள் தொகையில் 61% ஆண்களும், 39% பெண்களும் இருக்கின்றனர். இதன் சராசரி கல்வியறிவு விகிதம் 77% ஆகும். இது தேசிய சராசரியான 74% ஐ விட அதிகம். இதில் ஆண்களின் கல்வியறிவு 83% எனவும் பெண்களின் கல்வியறிவு 68% எனவும் உள்ளது. இதன் மக்கள் தொகையில் 12% பேர் 6 வயதுக்குட்பட்டவர்கள்.
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads