தில்லி பாசறை மன்றம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தில்லி பாசறை மன்றக் குழு (Delhi Cantonment board ) தில்லியில் உள்ள இராணுவப் பாசறையில் குடியிருப்பாளர்களுக்கான உள்ளாட்சி மன்றம் ஆகும். இது 1914-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகை 1,10,351 ஆகும்.[2] [1]தில்லி பாசறை தொடருந்து நிலையம் இப்பகுதியில் செயல்படுகிறது. 2006-ஆம் ஆண்டின் இந்தியப் பாசறைச் சட்டத்தின் கீழ பாசறை மன்றக் குழுக்கள் நிர்வகிக்கப்படுகிறது.[3]இப்பாசறை மன்றத் தேர்தல் மற்றும் நிர்வாகம் உள்ளாட்சி அமைப்பின் படி இயங்கினாலும், பாசறை நில உரிமைகள் பொறுத்த வரையில் இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இராணுவ நிலங்களை பராமரிக்கும் தலைமை இயக்குநரால் நிர்வகிப்படுகிறது.[4] தேசிய தலைநகர் வலயத்தின் பிற நான்கு உள்ளாட்சி அமைப்புகள் புதுதில்லி மாநகராட்சி, தெற்கு தில்லி மாநகராட்சி, வடக்கு தில்லி மாநகராட்சி மற்றும் கிழக்கு தில்லி மாநகராட்சி ஆகும்.


Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads