துன் சம்பந்தன் நிலையம்

மலேசியா, கோலாலம்பூர் மோனோரெயில் வழித்தடத்தில் ஒற்றைத் தண்டூர்தி நிலையம் From Wikipedia, the free encyclopedia

துன் சம்பந்தன் நிலையம்map
Remove ads

துன் சம்பந்தன் நிலையம் (ஆங்கிலம்: Tun Sambanthan Station; மலாய்: Stesen Tun Sambanthan; சீனம்: 敦善班丹站) என்பது மலேசியா, கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ், கோலாலம்பூர் மோனோரெயில் வழித்தடத்தில் (KL Monorail) அமைந்துள்ள ஓர் ஒற்றைத் தண்டூர்தி நிலையமாகும்.

விரைவான உண்மைகள் MR2 துன் சம்பந்தன் நிலையம், பொது தகவல்கள் ...

இந்த நிலையம் ஆகத்து 31, 2003 (மலேசிய விடுதலை நாள்) அன்று; மற்ற மோனோரெயில் நிலையங்களுடன் திறக்கப்பட்டது.[1]

இந்த நிலையம் கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் மாவட்டத்தில் உள்ள துன் சம்பந்தன் சாலை 4-இன் தெபிங் சாலைச் சந்திப்பின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அத்துடன் இந்த நிலையம் கிள்ளான் ஆற்றின் மேற்குப் பகுதியில், கோலாலம்பூர் மெதடிஸ்ட் கல்லூரி மற்றும் மலேசிய பார்வையற்றோர் சங்கத்திற்கு (Malaysian Association of the Blind) அருகிலும் உள்ளது.[2]

இந்த நிலையம் கிள்ளான் ஆற்றைக் கடக்கும் ஒரு பாதசாரி பாலத்திற்கு அருகில் உள்ளதால், அந்தப் பாதசாரி பாலத்தின் வழியாக சையத் புத்ரா சாலையையும் இணைக்கிறது. அந்த வகையில், சையத் புத்ரா சாலை, கிள்ளான் ஆற்றின் எதிரே உள்ள கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலையுடன் இணைக்கப்படுகிறது.

Remove ads

பொது

மலேசிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க தலைவர்களில் ஒருவராக அறியப்படும் வீ. தி. சம்பந்தன் அவர்களின் பெயரால் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டுள்ளது.

கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸில் உள்ள ஒரு முக்கிய சாலையான துன் சம்பந்தன் சாலைக்கும், துன் வீ. தி. சம்பந்தனின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது. இந்தச் சாலை கோலாலம்பூர் சென்ட்ரல் மோனோரெயில் முனையத்தின் அமைவிடமாகவும் திகழ்கிறது.[3]

துன் சம்பந்தன்

துன் சம்பந்தன் அவர்களின் இயற்பெயர் வீராசாமி திருஞான சம்பந்தன் (பிறப்பு: ஜூன் 16, 1919 - இறப்பு: மே 18, 1979). மலேசிய இந்தியர்ச் சமுதாயத்தின், தனிப்பெரும் தலைவராகத் திகழ்ந்தவர். மலேசிய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுகளில், அமைச்சர் பதவிகளை வகித்த இவர், மலேசியாவின் மிக உயரிய விருதான, துன் விருதைப் பெற்ற முதல் தமிழரும் ஆவார்.

அன்றைய மலேசியா (மலாயா) பிரித்தானியர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்கு, மலாயா இந்திய மக்களின் சார்பாளராக இலண்டன் சென்று மலாயா விடுதலைப் பத்திரத்தில் கையொப்பமிட்டு வந்த மலாயா நாட்டின் தலைவர்களில், துன் சம்பந்தன் அவர்களும் ஒருவர் ஆவார்.[4]

Remove ads

நிலைய தள அமைப்பு

L2 தள நிலை பக்க மேடை
தளம் 1 8 கோலாலம்பூர் மோனோரெயில்  MR11  தித்திவங்சா நிலையம் (→)
தளம் 2 8 கோலாலம்பூர் மோனோரெயில்  MR1  கோலாலம்பூர் சென்ட்ரல் (←)
பக்க மேடை
L1 இணைப்புவழி படிக்கட்டு
G அலுவலகம்/தெரு நிலை கட்டணம் கட்டுப்பாடு, பயணச்சீட்டு தானியங்கி, நிலையக் கட்டுப்பாடு, மோனோரெயில் நிலையக் கட்டுப்பாடு, கடைகள், வாடகை வாகனங்கள் முனையம், பாதசாரி கடப்பு. நுழைவாயில் A

நுழைவாயில்கள்

இந்த நிலையத்தில் ஒரே ஒரு வெளியேறு வழி மட்டுமே உள்ளது.

மேலதிகத் தகவல்கள் நுழைவாயில், இலக்கு ...

காட்சியகம்

துன் சம்பந்தன் நிலையக் காட்சிப் படங்கள்:

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads