துரிஞ்சிகுப்பம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
துரிஞ்சிகுப்பம் (Thurinjikuppam Village), தமிழ்நாட்டின் , திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட போளுர் வட்டத்தில் அமைந்துள்ளது இந்த கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற ஆதிபராசக்தி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
Remove ads
நிர்வாகம்
இந்த கிராமம் துரிஞ்சிகுப்பம் ஊராட்சிக்குட்பட்டதாகும் . துரிஞ்சிகுப்பம் ஊராட்சியின் நிர்வாக தலைமையிடம் இங்கு அமைந்துள்ளது. மொத்தம் 9 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது . இவற்றில் இருந்து 9 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 9 வார்டுகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.அவை:-
- பிள்ளையார் கோயில் தெரு
- தண்டபாணி கோயில் தெரு
- குசால் பேட்டை மற்றும் கங்கையம்மன் கோயில் தெரு
- வீரக்கோயில் தெரு
- சித்தேரி
- பெரியேரி
- கம்மனந்தல்
- விளக்கனந்தல்
- கொல்லைமேடு
Remove ads
அமைவிடம்
துரிஞ்சிகுப்பம் கிராமம், திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் , துரிஞ்சிகுப்பம் ஊராட்சியில், சவ்வாது மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இதன் கிழக்கே ஆரணி நகரம் 22 கி.மீ தொலைவிலும், தெற்கே போளூர் 14 கி.மீ தொலைவிலும், மற்றும் வடக்கே கண்ணமங்கலம் 22 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
மக்கள் தொகை
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2993 ஆகும். இவர்களில் பெண்கள் 1343 பேரும் ஆண்கள் 1404 பேரும் உள்ளனர். 2993 மக்கள்தொகை கொண்ட துரிஞ்சிகுப்பம் கிராமம், போளூர் வட்டத்தில் 36 வது அதிக மக்கள் தொகை கொண்ட கிராமமாகும், இது இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தின் போளூர் வட்டத்தில் அமைந்துள்ளது. துரிஞ்சிகுப்பம் கிராமத்தின் மொத்த புவியியல் பரப்பளவு 7 கி.மீ. 2 ஆகும், இது துணை மாவட்டத்தின் பரப்பளவில் 26 வது பெரிய கிராமமாகும். கிராமத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கி.மீ. 2 க்கு 417 நபர்கள். இந்த ஊராட்சி, போளூர் சட்டமன்றத் தொகுதிக்கும், ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள்
துரிஞ்சிகுப்பம் கிராமத்திலிருந்து சாலை வசதிகள் வலைப்பின்னலாக அமைக்கப்பட்டுள்ளது.
- பெரியேரி - சித்தேரி - துரிஞ்சிகுப்பம் - கேளூர் - வடமாதிமங்கலம் சாலை
- துரிஞ்சிகுப்பம் - விளாங்குப்பம் - முனிவாந்தங்கள் சாலை
- துரிஞ்சிகுப்பம் - ஆத்துவாம்பாடி - கட்டிப்பூண்டி - போளூர் சாலை
- ஆரணியிலிருந்து (தடம் எண்: 6A LSS), கேளூர்,வடமாதிமங்கலம் ரயில் நிலையம், களம்பூர் வழியாக ஒரு நகரப்பேருந்து சேவைகள் உள்ளது.
- அவலூர்பேட்டையிலிருந்து தேவிகாபுரம், போளூர்,குன்னத்தூர், கட்டிப்பூண்டி வழியாக ஒரு நகர பேருந்தும்(தடம் எண்: P2 LSS) குறிப்பிட்ட நேரத்திற்கு பேருந்து சேவைகள் உள்ளது.
- இங்கிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் கூட்டு சாலை கேளூர் சந்தைமேடு எனுமிடத்தில் அமைந்துள்ளது. இந்த கூட்டு சாலைக்கு செல்ல 24 மணி நேரமும் ஆட்டோ வசதியும், குறிப்பிட்ட நேரத்திற்கு பேருந்து வசதிகளும் உள்ளன. NH 234 உடன் இந்த கூட்டு சாலை இணைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை சித்தூர் முதல் கடலூர் வரை (திருவண்ணாமலை - போளூர் - ஆரணி - வேலூர் சாலை) செல்லும் சாலை ஆகும்.
Remove ads
இதனையும் காண்க
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads