துவாங்கு முகிரிஸ் மருத்துவமனை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
துவாங்கு முகிரிஸ் யுகேஎம் மருத்துவமனை (மலாய்:Hospital Canselor Tuanku Muhriz UKM (HCTM); ஆங்கிலம்:Hospital Canselor Tuanku Muhriz UKM) (HCTM) என்பது மலேசியா, கோலாலம்பூரில் அமைந்துள்ள மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் மருத்துவமனை ஆகும். முன்பு மலேசிய தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை (Hospital Universiti Kebangsaan Malaysia) (HUKM) என்று அழைக்கப்பட்டது. மலேசியாவில் உள்ள ஐந்து பல்கலைக்கழக மருத்துவமனைகளில் இதுவும் ஒன்றாகும்.[3]
இது கோலாலம்பூர், பண்டார் துன் ரசாக்கில் அமைந்துள்ளது. மற்றும் மலேசிய தேசிய பல்கலைக்கழகம் (UKM) மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இந்த மருத்துவமனைக்கு மலேசிய அரசாங்கம் நிதியுதவி வழங்குகிறது.
இந்த மருத்துவமனையில் மலேசிய தேசிய புற்றுநோய் மன்றம் (MAKNA); மற்றும் மலாயா வங்கி நிறுவனம் மூலம் செயல்படும் புற்றுநோய் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனையும் உள்ளது.
Remove ads
பொது
துவாங்கு முகிரிஸ் யுகேஎம் மருத்துவமனை நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. மே 30, 1972-இல் முதன்முதலாக மருத்துவத்துறை உருவாக்கப்பட்டது. அந்த மருத்துவத்துறை மே 1973-இல் கோலாலம்பூர் ஜாலான் பந்தாய் பாரு சாலையில் இருந்த மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகத்தில் படிப்பைத் தொடங்கியது.
முதல் குழுவில் 44 மாணவர்கள் மே 1974-இல் படிப்பைத் தொடங்கினர். கோலாலம்பூர் மருத்துவமனை பகுதியில் மருத்துவத் துறைக்காக ஒதுக்கப்பட்ட தற்காலிக கட்டிடத்தில் முன் மருத்துவப் படிப்பு (Clinical Courses) தொடங்கப்பட்டது. 1977-ஆம் ஆண்டில், கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அருகில் மருத்துவத் துறைக்கான நிரந்தரக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு முழுமையாகப் பயன்படுத்தப்பட்டது. சிலாங்கூர், தஞ்சோங் காராங், தஞ்சோங் காராங் மருத்துவமனையிலும் படிப்புகள் நடத்தப்பட்டன.
புதிய பயிற்சி மருத்துவமனை
1990-இல், நீண்டகாலப் பயன்பாட்டுக்காக புதிய பயிற்சி மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டது. நவம்பர் 2, 1993-இல், செராஸ் பகுதியில் மலேசிய தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் கட்டுமானம் தொடங்கியது.
சூலை 1, 1997-இல், மலேசிய தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை முடிக்கப்பட்டு செயல்படத் தொடங்கியது. 14 சூலை 1998-இல் அப்போதைய மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது, மலேசிய தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.[4]
இதுவரையில் மலேசிய தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை 3,000 மருத்துவர்கள் மற்றும் 1,200 மருத்துவ நிபுணர்களை பல்வேறு துறைகளில் பயிற்றுவித்து உருவாக்கியுள்ளது.
Remove ads
காட்சியகம்
- சிறார் மருத்துவமனை
- அவசரப் பிரிவு
- பதிவகம்
- கட்டண செலுத்தகம்
- கல்வியகம்
- வரவேற்பறை 1
- வரவேற்பறை 2
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads