தெய்வ நெறிக் கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தெய்வ நெறிக் கழகம் (Divine Life Society) சுவாமி சிவானந்தரால் 1936-ஆம் ஆண்டு இந்தியாவின் ரிசிகேசத்தில் தொடங்கப் பெற்றது. தற்போது இதன் கிளைகள் உலகம் முழுதும் பல்வேறு நாடுகளில் ஆன்மீகப்பணி செய்துவருகிறது. மேலும் சுவாமி சிவனந்தரின் சீடர்கள் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற பல்வேறு கண்டங்களில் சுயமாக ஆன்மீகத் தொண்டு செய்து வருகிறார்கள்.[1][2][3]

Remove ads
நோக்கம்
பின்வரும் வழிகளில் ஆன்மிகத்தை பரப்புவது
- புத்தகங்கள், நாளிதழ்கள் வாயிலாக
- ஆன்மிக கலந்துரையாடல்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள் மூலமாக
- யோகா மற்றும் வேதங்கள் கற்றுக்கொடுப்பதின் மூலமாக
- தொண்டு நிறுவனங்கள் புதிதாய் தொடங்குவது மூலமாக
- பழைய பண்பாடு மற்றும் கலாச்சாரம் பாதுகாப்பதின் மூலமாக
வரலாறு
சுவாமி சிவானந்தர் 1936 ஆம் ஆண்டு தனது ஆன்மிகச்சுற்றுலாவை முடித்துக்கொண்டு இந்தியாவின் ரிஷிகேஷத்தில் ஒரு குடிலில் முதன்முதலாக தெய்வ நெறிக் கழகத்தை தொடக்கச்செய்தார். தெஹ்ரி கரவாலின் அரசர், கழகம் நிறுவ ஒரு காணி இடத்தை நன்கொடையாக சுவாமி சிவானந்தருக்கு கொடுத்து உதவினார். கழகத்தின் தலைமையகம் இந்த இடத்தில இருந்து அன்றுமுதல் இன்றுவரை பெரிய தொண்டுநிறுவனமாக உருப்பெற்று ஆன்மிகச்சேவை ஆற்றிவருகிறது.


Remove ads
துறைகள்
- சிவானந்த ஆசிரமம் - தெய்வ நெறிக் கழகத்தின் தலைமையிடம்.
- யோகா வேதாந்தா அகாடமி - யோகா தனிமனித ஒழுக்கத்திற்கும், மனிதகுல நல் வாழ்விற்கும் பயிற்றுவிக்கும் இடமாக திகழ்கிறது.
- சிவானந்த பதிப்பகம் - தெய்வ நெறிக் கழகத்தின் பதிப்பகமாகும்.
- இலக்கிய பிரிவு - ஆன்மிகம் மற்றும் இலக்கிய சம்பந்தமான இலவச புத்தகங்கள் கொடுத்து உதவுகிறது.
- சிவானந்த மருத்துவமனை - இலவச மருத்துவ சேவை செய்கிறது.
கிளைகள்
இந்தியா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற பல்வேறுநாடுகளில் கிளைகள்உள்ளது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads