தெலங்காணா உயர் நீதிமன்றம்

From Wikipedia, the free encyclopedia

தெலங்காணா உயர் நீதிமன்றம்map
Remove ads

தெலங்காணா உயர் நீதிமன்றம் என்பது இந்திய மாநிலமான தெலங்காணா மாநிலத்தின் உயர் நீதிமன்றம் ஆகும். இது 7வது ஐதராபாத் நிஜாம் மீர் ஒசுமான் அலி கானால் அன்றைய ஐதராபாத் இராச்சியத்தில் அமைக்கப்பட்டது. பின்னர் இது ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது நவம்பர் 5, 1956 முதல் மாநில மறுசீரமைப்புச் சட்டம், 1956 கீழ் தோற்றுவிக்கப்பட்டது. ஆந்திரப் பிரதேச மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் ஐதராபாத்தில் உள்ள நீதித்துறை உயர் நீதிமன்றம் என மறுபெயரிடப்பட்டது.

விரைவான உண்மைகள் தெலங்காணா உயர் நீதிமன்றம், நிறுவப்பட்டது ...

இந்தியக் குடியரசுத் தலைவர், 26 திசம்பர் 2018 அன்று, தெலங்காணா மாநிலத்திற்கும் ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கும் ஐதராபாத்தில் உள்ள உயர் நீதிமன்றத்தை ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றமாகப் பிரித்து, அமராவதியில் முதன்மை இடமாகவும், மாநிலத்திற்கான உயர் நீதிமன்றமாகவும் பிரித்து உத்தரவு பிறப்பித்தார். தெலங்காணா மற்றும் ஆந்திரப் பிரதேசத்திற்கான தனி உயர்நீதிமன்றங்களாகப் பிரிக்கப்பட்ட உயர்நீதி மன்றத்தின் செயல்பாடு அரசியலமைப்பு சட்டப்படி ஜனவரி 1, 2019 முதல் நடைமுறைக்கு வந்தது.

ஜூன் 2, 2014 முதல், ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம், 2014 நடைமுறைக்கு வந்த பிறகு, உயர் நீதிமன்றம் மறுபெயரிடப்பட்டு, ஜனவரி 1, 2019 வரை இரு மாநிலங்களுக்கும் பொதுவான உயர் நீதிமன்றமாகச் செயல்பட்டது. ஆந்திரப் பிரதேசத்திற்குத் தனி உயர்நீதிமன்றம் நிறுவப்பட்டு 2019 ஜனவரி 1 அன்று திறக்கப்பட்டு, அதற்கு ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் என்று பெயரிடப்பட்டது.

ஐதராபாத்தில் உள்ள உயர் நீதிமன்றத்தின் இருக்கையில் 24 நீதிபதி பணியிடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

Remove ads

நீதித்துறையின் வரலாறு

1953 இல் ஐதராபாத் நிசாமின் ஆட்சிக்குப் பின்னர் ஐதராபாத் இராச்சியம் தெலங்காணா பகுதி சென்னை மாகாணத்துடன் இணைந்திருந்த (இந்திய அரசாங்கத்தால் செப்டம்பர் 17, 1948 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது) பகுதியானது பிரிக்கப்பட்டு ஆந்திரப் பிரதேசம் 1956ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. ஜனவரி 1, 2019 அன்று ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்பட்டு தெலங்காணா மாநிலம் உருவான பிறகு, தெலங்காணா உயர் நீதிமன்றம் ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றம் மற்றும் தெலுங்கானா உயர் நீதிமன்றமாகப் பிரிக்கப்பட்டது.

Remove ads

உயர் நீதிமன்ற கட்டிடத்தின் வரலாறு

தெலங்காணா உயர் நீதிமன்றம் முசி நதியின் தென்கரையில் அமைந்துள்ளது. ஐதராபாத் இராச்சிய ஆட்சியாளரான ஏழாவது நிஜாம் மிர் உசுமான் அலி கானால், சாராசெனிக் பாணியில் சிவப்பு மற்றும் வெள்ளைக் கற்களால் கட்டப்பட்ட நீதிமன்றக் கட்டிடம் நகரத்தின் மிகச்சிறந்த கட்டிடங்களில் ஒன்றாகும்.

உயர் நீதிமன்றத்தின் வரைபடம் செய்ப்பூரைச் சேர்ந்த சங்கர் லால் என்பவரால் வரையப்பட்டது. வடிவமைப்பை உள்ளூர் பொறியாளர் மெகார் அலி பாசில் நிறுவினார். இதன் தலைமைப் பொறியாளர் நவாப் கான் பகதூர் மிர்சா அக்பர் பைக் ஆவார். 1915ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம்தேதி கட்டுமானம் தொடங்கப்பட்டு 1919ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிறைவடைந்தது. 20 ஏப்ரல் 1920 அன்று உயர் நீதிமன்ற கட்டிடம் ஏழாவது நிஜாம் மிர் உஸ்மான் அலி கானால் திறந்து வைக்கப்பட்டது.

உயர் நீதிமன்றத்திற்கான அடித்தளத்தைத் தோண்டும்போது, குதுப் ஷாஹி வம்ச அரண்மனைகளான ஹினா மகால் மற்றும் நாடி மகால் ஆகியவற்றின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. சூரியன் மறையும் நேரத்தில் நயா புல் பாலத்திலிருந்து காணும் போது உயர்நீதிமன்றம் அழகாகவும் சுவாரஸ்யமாகவும் தெரிகிறது.

இதன் கட்டுமானம் முடிந்தபிறகு, வெள்ளித் திறவுகோலுடன் கூடிய உயர் நீதிமன்றத்தின் வெள்ளி மாதிரி 1936இல் வெள்ளி விழா கொண்டாட்டங்களின் போது நீதித்துறையால் ஏழாவது நிஜாம் மிர் உசுமான் அலிகானுக்கு வழங்கப்பட்டது. சுமார் 300 கிலோ எடையுள்ள தடிமனான வெள்ளித் தகட்டில் கட்டிடங்களின் மாதிரி செதுக்கப்பட்டுள்ளது. இந்த நினைவுப் பொருளானது தற்பொழுது, புராணி அவேலியில் உள்ள நிஜாம் அருங்காட்சியகத்தில் உள்ளது.

உயர் நீதிமன்றத்தின் பிரதான கட்டிடம் 1919ஆம் ஆண்டு அப்போதைய நிசாமின் அரசால் ஆறு நீதிபதிகள் தங்கும் வசதியுடன் அலுவலக ஊழியர்கள், பதிவு அறைகள் மற்றும் வழக்கறிஞர்கள் கூடம் ஆகியவற்றுடன் கட்டப்பட்டுள்ளது.[1]

ஆந்திரா உருவான பிறகு

மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் விளைவாக 1956ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் உருவாக்கப்பட்டபோது, நீதிபதிகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்த்தப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அப்போதிருந்த தங்குமிடம் போதுமானதாக இல்லை, எனவே கூடுதல் கட்டிடம் 1958-59-ல் கட்டப்பட்டது. அலுவலக அறைகள், பதிவு அறைகள், வழக்கறிஞர்களின் அறைகள் (மொத்தம் 42) மற்றும் சட்ட அதிகாரிகளுக்கான அறைகள் புதியக் கட்டிடத்தில் அமைந்திருந்தன. நீதிபதிகள் அறைகள் மற்றும் நீதிமன்ற அவை பிரதான கட்டிடத்தில் செயல்பட ஏதுவாக அங்கிருந்த பதிவேடுகள் அறைகள், அலுவலர் அறைகள் மாற்றியமைக்கப்பட்டன.

Remove ads

கூடுதல் கட்டுமானங்கள்

Thumb
உயர் நீதிமன்றத்தின் பிரதான வாயில், ஐதராபாது

1958-ல் 20,000ஆக இருந்த உயர் நீதிமன்றத்தின் வழக்குகள் 1970-ல் 35,000ஆக உயர்ந்துள்ளது. நீதிபதிகளின் எண்ணிக்கையும் 14ல் இருந்து 21ஆக உயர்ந்தது. நீதிபதிகள், ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட அதிகாரிகளுக்குக் கூடுதல் இடவசதி வழங்க, மூன்றாவது கட்டிடம் கட்ட முன்மொழியப்பட்டு கட்டுமான பணிகள் 1976-ல் பணிகள் முடிக்கப்பட்டன. 1980ஆம் ஆண்டில் சட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை 8ல் இருந்து 18 ஆக அதிகரிக்கப்பட்டது. வழக்குகளின் எண்ணிக்கையும் 55,593 ஆக உயர்ந்தது. 1979ஆம் ஆண்டில் நான்கு மாடிகள் கொண்ட இணைப்புக் கட்டிடத்திற்கான தீட்டப்பட்ட திட்டம் நிதிப் பற்றாக்குறை காரணமாகச் செயல்படுத்த முடியவில்லை. தற்போது 20 நீதிமன்ற அரங்குகள் மற்றும் 24 அறைகள் உயர்நீதிமன்ற பிரதான கட்டிடம் மற்றும் இணைப்பு கட்டிடங்கள் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ளன. மாண்புமிகு பிரதம நீதியரசர் அவர்களால் அடிக்கல் நாட்டப்படும் தற்போதைய கட்டிடத்தில் எட்டு நீதிமன்ற அரங்குகள் மற்றும் நீதிபதிகளுக்கான எட்டு அறைகள் இருக்கும். வழக்குகளின் எண்ணிக்கை, 1958 முதல் 1982 வரை 20,078 ஆக உயர்ந்துள்ளது. 1985இல் இதர வழக்கு 123 ஆக இருந்தது.

தீ விபத்து

ஆகத்து 31, 2009 அன்று, கட்டிடத்தில் தற்செயலான தீ விபத்து ஏற்பட்டது. இத் தீ விபத்தில் அரிதான இங்கிலாந்து சட்ட அறிக்கைகள், பிரைவி குழு பத்திரிகைகள் மற்றும் நிஜாமின் முழு உருவப்படம் மற்றும் நீதிபதிகளின் உருவப்படங்கள் அடங்கிய நூலகத்திற்குக் கடுமையான சேதம் ஏற்பட்டது. எனினும் நீதிமன்ற பதிவுகள் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் கட்டமைப்பும் பாதுகாக்கப்பட்டது.[2] [3]

தலைமை நீதிபதிகள்

மேலதிகத் தகவல்கள் வரிசை எண்., தலைமை நீதிபதி ...
Remove ads

நீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதிகள்

உயர் நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள்

  • திரு. நீதிபதி சதீஷ் சந்திர சர்மா, தலைமை நீதிபதி
  • நீதிபதி உஜ்ஜல் புயான்
  • நீதிபதி அடவல்லி ராஜசேகர் ரெட்டி
  • நீதிபதி பொனுகோடி நவீன் ராவ்
  • நீதிபதி சல்லா கோதண்ட ராம்
  • முனைவர் நீதிபதி ஷமீம் அக்தர்
  • நீதிபதி பொட்லபள்ளி கேசவ ராவ்
  • நீதிபதி அபிநந்த் குமார் ஷவிலி
  • நீதிபதி டி. அமர்நாத் கவுட்
  • திருமதி. நீதிபதி காந்திகோட்டா ஸ்ரீ தேவி
  • நீதிபதி குனுரு லக்ஷ்மன் கவுட்
  • நீதிபதி தடகமல்லா வினோத் குமார்
  • நீதிபதி அன்னிரெட்டி அபிஷேக் ரெட்டி
  • நீதிபதி பொல்லம்பள்ளி விஜயசென் ரெட்டி
  • திருமதி. நீதியரசர் பெரு ஸ்ரீ சுதா
  • நீதிபதி சில்லக்கூர் சுமலதா
  • திருமதி. நீதிபதி குரிஜாலா ராதா ராணி
  • நீதிபதி முன்னூரி லக்ஷ்மன்
  • நீதிபதி நூன்சாவத் துக்காராம்ஜி
  • நீதிபதி அதுலா வெங்கடேஸ்வர ரெட்டி
  • திருமதி. நீதிபதி படோல்லா மாதவி தேவி [6]
Remove ads

உயர் நீதிமன்றத்தின் தற்போதைய பதிவாளர்கள்

  1. தலைமை பதிவாளர்- ஜி. அனுபமா சக்கரவர்த்தி
  2. பதிவாளர் (நீதித்துறை I)- ஜி.வி.சுப்பிரமணியம்
  3. பதிவாளர் (நீதித்துறை II)-கே கங்காதர ராவ்
  4. பதிவாளர் (நிர்வாகம்) - கே.சுஜனா
  5. பதிவாளர் (ஐடி)-மற்றும்-மத்திய திட்ட ஒருங்கிணைப்பாளர் (தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின் குழு தொடர்பானது)- எம். ராதா கிருஷ்ணா சாஹவான்
  6. பதிவாளர் (விஜிலென்ஸ்) - கே. சாய் ரமா தேவி
  7. பதிவாளர் (மேலாண்மை)-வி. ரமேஷ்
  8. பதிவாளர் (நெறிமுறை)-டி. வெங்கடேஸ்வர ராவ்
  9. மாவட்ட நீதிபதி (விசாரணைகள்)
  10. பதிவாளர் (ஆட்சேர்ப்பு)
Remove ads

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads