தேசிய இளைஞர் தினம் (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான சனவரி 12 ஆம் தியதி தேசிய இளைஞர் நாள் (National Youth Day) என இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
1984 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இந்நாளினை "தேசிய இளைஞர் நாளாக" அறிவித்தது, அதைத்தொடர்ந்து 1985-ல் சனவரி 12-ம் திகதி முதன்முதலாக கொண்டாடப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.
Remove ads
வரலாறு
ஆங்கில நாட்காட்டியின்படி, சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான சனவரி 12-ம் திகதியை தேசிய இளையவர்கள் நாளாக கடைப்பிடிக்க இந்திய அரசு 1984-ல் முடிவுசெய்து அடுத்து வந்த ஆண்டான 1985-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சனவரி 12-ஐ தேசிய இளைஞர்களின் நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சுவாமி விவேகானந்தர் சிறுவயதிலேயே இந்துசமய கொள்கைகளில் அதீத ஈடுபாடும், பகுத்தறிவுப்பெற்ற சிந்தனைவாதியாகவும், தத்துவமும் புலமையும், சேவை மனப்பான்மை மிக்கவராக காணப்பட்டார். மேற்கூறிய அனைத்தும் இந்திய தகவல் தொடர்புகள் வலைப்பதிவு மூலம் அறியப்பட்டவையாகும்.[2]
2013-ஆம் ஆண்டு சனவரி 12-ம் திகதி, சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்தநாள் விழா துவங்கிய தருணத்தில், அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங், விவேகானந்தரின் இப்பிறந்தநாள் விழாவை, இவ்வாண்டு முழுவதும் கொண்டாடவேண்டுமென தனது வாழ்த்துரையில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.[3]
Remove ads
இவையையும் காண்க
மேற்சான்றுகள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads