தேசிய மாணவர் படை (இந்தியா)
history From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய மாணவர் படை (என்.சி.சி.) (National Cadet Corps (India)) என்பது இந்தியப் பாதுகாப்புப் படைகளின் இளைஞர் பிரிவு ஆகும். இதன் தலைமையகம் புதிய தில்லியில் அமைந்துள்ளது. இது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விருப்ப அடிப்படையில் சேரும் வாய்ப்பை வழங்குகிறது. இது மூன்று படைப்பிரிவுகளைச் சேர்ந்த அமைப்பாகும் — நிலப்படை, கடற்படை மற்றும் வான்படை. இதில் சேரும் மாணவர்கள் சிறிய ஆயுதங்கள் பற்றிய அடிப்படை இராணுவப் பயிற்சியும் அணிவகுப்பு பயிற்சியும் பெறுகிறார்கள். பயிற்சி முடிந்த பின், அதிகாரிகளுக்கும் மாணவர்களுக்கும் நேரடி இராணுவச் சேவையில் பங்கேற்க வேண்டிய கட்டாயம் இல்லை.

தேசிய மாணவர் படை 16 சூலை 1948 அன்று நிறுவப்பட்டது. லெப். ஜெனரல் தலைமையிலான இப்படையின் தலைமை அலுவலம் புது தில்லியில் உள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய இராணுவத்தின் கீழ் தேசிய மாணவர் படை, இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேனிலைப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்படுகிறது. இப்படையில் 10,00,000 முதல் 13,00,000 மாணவ, மாணவிகள் பயிற்சி பெறுகிறார்கள்.
Remove ads
தோற்றம்
1942 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசு உருவாக்கிய பல்கலைக் கழக அதிகாரிகள் பயிற்சிப் படை (University Officers Training Corps (UOTC)) என்பதே, இந்தியச் சட்டப்படி தேசிய மாணவர் படை ஆனதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இந்திய தேசிய மாணவர் படைச் சட்டம் XXXI, 1948 இதன் தோற்றத்திற்குக் காரணமாக அமைந்தது.[4] இதன் கீழ் மூன்று பெரும்பிரிவுகள் அமைந்துள்ளன. இம்மூன்றுமே தேசிய மாணவர் படையினர் என்றே அழைக்கப்படுகின்றனர்.ஆடவர்களுக்கு மட்டுமே அமைந்திருந்த இந்த பிாிவில் தற்பாேது பெண்களும் சேர்க்கப்படுகின்றனர்.
- தரைப்படை அணி
- வான்படை அணி
- கடற்படை அணி
முகாம்கள்

- இளைஞர் பரிமாற்ற நிரல் (Youth Exchange Programme)
- தலைமைப் பண்பிற்கான முகாம்கள் (Leadership Camp)
- வான்படை முகாம் (Vayu Sainic Camp)
- கடற்படை முகாம் (Nau Sainik Camp)
- மலையேற்ற முகாம்கள் (Mountaineering Camp)
- தேசிய ஒற்றுமைக்கான முகாம்கள் (National Integration Camp)
- படை ஒருங்கிணைவு முகாம் (Army Attachment Camp)
- கடற்படை ஒருங்கிணைவு முகாம் (Naval Attachment Camp)
- வான்படை ஒருங்கிணைவு முகாம் (Airforce Attachment Camp)
- குடியரசு நாளுக்கான முகாம் (Republic Day Camp)
- வருடாந்திர பயிற்சி முகாம் (Annual Training Camp)
- கூட்டு வருடாந்திர பயிற்சி முகாம் (Combained Annual Training Camp)
Remove ads
உறுதிமொழி
1. "தேசிய கேடட் படையின் கேடட்களான நாங்கள், இந்தியாவின் ஒற்றுமையை எப்போதும் நிலைநிறுத்துவோம் என்று மனதார உறுதிமொழி எடுக்கிறோம்."
2. எங்கள் நாட்டின் ஒழுக்கமான மற்றும் பொறுப்பான குடிமகனாக இருக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
3. நாம் சுயநலமின்மையின் உணர்வில் நேர்மறையான சமூக சேவையை உணர்ந்து நம் சக மனிதர்களுக்காக அக்கறை கொள்வோம்.
இந்தியச் சட்ட முறையில் அறிவிக்கப்பட்ட, ஆங்கில உறுதிமொழி[5] வருமாறு;
- We the cadet of the national cadet corps, do solemnly pledge that we shall always uphold the unity of India.
- We resolve to be disciplined and responsible citizen of our nation.
- We shall undertake positive community service in the spirit of selflessness and concern for our fellow beings.
Remove ads
செயற்பாடுகள்

பள்ளிப் பருவத்திலும், கல்லூரிப் பருவத்திலும் சமூகத்தின் மீது அக்கறை செலுத்தும் விதத்தில், இளவயதினரை வழிநடத்த, என்சிசி எனப்படும் தேசிய மாணவர் படை அமைக்கப் பட்டுள்ளது. இராணுவத்திலும், காவல் துறையிலும் சேர்ந்து பணியாற்ற விரும்பும் மாணவர்களுக்கு படிப்பு காலத்திலேயே அதற்கேற்ற பயிற்சியை என்சிசி அளிக்கக் கூடியது.
தேசிய மாணவர் படையில் உள்ள மாணவர்களின் திறனை வளர்க்கும் வகையில் அவர்களுக்கு தனி ஆளுமைத் திறன், பேச்சுபயிற்சி, கடற்படையில் உள்ள அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படும். அவர்களுக்கு துப்பாக்கிச் சுடுதல், தீயணைப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.வேலைவாய்ப்பு பற்றி தெரிந்து கொள்ளும் வகையிலும், வேலைவாய்ப்புக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளவும் ஒவ்வொரு தேசிய மாணவர் படை பிரிவு அலுவலகத்திலும், வேலைவாய்ப்பு வழிகாட்டி பிரிவு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
2008-ஆம் ஆண்டு, தில்லியில் மகளிர் தேசிய மாணவர் படைப் போட்டிகள் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து17 மகளிர் படைப்பிரிவுகள் கலந்து கொண்டன. அனைத்து போட்டிகளிலும், பெரும்பான்மையான வெற்றியைப் பெற்று சுழற்கோப்பையை தமிழ்நாடு,பாண்டிச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள் அடங்கிய மகளிர் அணி வென்றது.[6]
எடுகோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads