தேசிய வடிவமைப்பு நிறுவனம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

23°0′40″N 72°34′10″E

விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...

தேசிய வடிவமைப்பு நிறுவனம் (National Institue of Design-NID) , இந்திய அரசின் வணிகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் 60 ஆண்டுகாலமாக செயல்படும் ஒரு தொழிற்கல்வி நிறுவனம். வடிவமைப்புக் கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சிகளில் முக்கிய இடத்தை இந்நிறுவனம் வகிக்கிறது.[1]. இந்நிறுவனம் வடிவமைப்புத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தல் (Research and Development) வசதிகள் கொண்டுள்ளது. [2]

இந்திய அரசால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களில் ஒன்றாக தேசிய வடிவமைப்பு நிறுவனம் எடுத்துக் கொள்ளப்பட்டதாக 18 சூலை 2014ஆம் நாளில் இந்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. [3]

இந்நிறுவனத்தின் தலைமையிடம் அகமதாபாத். காந்திநகர், பெங்களூரு ஆகிய இடங்களில் கிளைகள் உள்ளது. இளநில மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில், 17 வேறுபட்ட வகையான வடிவமைப்புத் தொழிற்கல்வி பயிற்சிகள் வழங்குகிறது. தொழில் துறை சார்ந்த வடிவமைப்புகள் தொடர்பான கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதில், 55 வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளது. வடிவமைப்புகள் தொடர்பான ஆய்வுப் படிப்புகளும் இந்நிறுவனத்தில் உள்ளன.

இந்நிறுவனம், மேனிலைப் பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் மற்றும் அதற்கு இணையான படிப்பு முடித்தவர்களுக்கும், அகமதாபாத்தில் அமைந்துள்ள தலைமையகத்தில் நான்காண்டு கால வடிவமைப்பு இளநிலப் பட்டமும் மற்றும் காந்திநகர், பெங்களூரு, அகமதாபாத் ஆகிய இடங்களில் அமைந்துள்ள கிளை நிறுவனங்களில், இளநிலைப் பட்டம் பெற்றவர்களுக்கு 17 வகையான வடிவமைப்புகளில், இரண்டரை ஆண்டுக் கால முதுகலைப் பட்டயப் பயிற்சியும் வழங்குகிறது. [4]

Remove ads

வழங்கும் தொழிற்கல்விகள்

  1. தொழிற்சாலை வடிவமைப்பு
  2. தொலைத் தொடர்பு வடிவமைப்பு
  3. ஜவுளி (Textile) வடிவமைப்பு
  4. ஆயத்த ஆடைகள் வடிவமைப்பு
  5. ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads