தேசியச் சமூக கட்சி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேசியச் சமூக கட்சி எனும் இராச்ட்டிரிய சமாஜ் பக்சா ("National Society Party") 2003-இல் மகாராட்டிராவினைத் தளமாகக் கொண்ட ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். மகாதேவ் ஜாங்கர் கட்சியின் நிறுவனராகவும் தலைவராகவும் இருந்தார். நாந்தேடுவினைச் சேர்ந்த பிரபோதங்கர் கோவிந்த்ராம் சுர்னார், 1990 முதல் தனது சமூகத்தில் சமூகப் பணியில் தன்னை அர்ப்பணித்துள்ளார். கோவிந்த்ராம் சுர்னாரும் மகாதேவ் ஜானகரும் மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது முதன்முதலில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பு கோவிந்த்ரம் சுர்னாரின் ஆதரவுடன் மகாதேவ் ஜங்கர் மராத்வாடா பகுதியில் இக்கட்சியினைத் தொடங்க வழி வகுத்தது. 1998 மக்களவைத் தேர்தலில் நாந்தேடுவில், மகாதேவ் ஜங்கர் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு சுமார் 20,000 வாக்குகளைப் பெற்றார். கோவிந்த்ராம் சுர்னாரும் குடும்பத்தினரும் இந்தத் தேர்தலுக்கான பொறுப்புகளை நிர்வகிப்பதில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பினைச் செய்தனர்.

விரைவான உண்மைகள் தேசியச் சமூக கட்சி, தலைவர் ...

2004 மகாராட்டிரச் சட்டமன்றத் தேர்தலில், இக்கட்சி 38 இடங்களில் போட்டியிட்டது. இவர்கள் 144,758 வாக்குகளைப் பெற்றனர். இது இத்தேர்தலில் செலுத்தப்பட்ட வாக்குகளில் 0.35% ஆகும். 2004 மக்களவைத் தேர்தலில், மகாராட்டிராவில் 12 வேட்பாளர்களையும், கருநாடக மாநிலத்தில் ஒரு வேட்பாளரையும் நிறுத்தியது. இத்தேர்தலில் தேசியச் சமூக கட்சி 146,571 வாக்குகளைப் பெற்றது. இது அனைத்து வாக்குகளிலும் 0.04% ஆகும்.[1] 2009 மக்களவைத் தேர்தலில், இக்கட்சி மகாராட்டிராவில் 29 வேட்பாளர்களையும், அசாமில் இரண்டு வேட்பாளர்களையும், குசராத்தில் ஒருவரையும், கருநாடகாவில் ஒருவரையும் நிறுத்தியது.[2] இத்தேர்தலில் மொத்தமாக 201,065 வாக்குகளையும், மகாராட்டிராவில் 190,743 வாக்குகளையும் பெற்றனர். மாதாவில் சரத் பவார் மற்றும் சுபாசு தேசுமுக் ஆகியோருக்கு எதிராக மகாதேவ் ஜாங்கர் போட்டியிட்டு 10.76% வாக்குகளைப் பெற்றார்.[3]

Remove ads

மகாராட்டிரா சட்டப்பேரவைத் தேர்தல், 2009

மகாராட்டிரச் சட்டமன்றத் தேர்தலில், தேசியச் சமூக கட்சி ரிடலோசு என்று பிரபலமாக அறியப்பட்ட குடியரசுக் கட்சியின் இடது ஜனநாயக முன்னணியில் ஒரு பகுதியாக இருந்தது. அகமத்பூர் தொகுதியில் தேசியச் சமூக கட்சி வேட்பாளர் பாபாசாகேப் பாட்டீல் வெற்றி பெற்றார்.

2014 மக்களவைத் தேர்தல்

தேசியச் சமூக கட்சி 2019 சனவரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது. 2014 பொதுத் தேர்தலின் போது, தேசியச் சமூக கட்சியும் கூட்டணிக் கட்சிகளான பாஜக, இந்தியக் குடியரசுக் கட்சியும் (அத்வாலே மற்றும் சுவாபிமானி சேத்காரி சக்தானா) இணைந்து போட்டியிட்டது.[4]

மகாராட்டிரா சட்டப்பேரவைத் தேர்தல், 2014

2014 மகாராட்டிரச் சட்டமன்றத் தேர்தலில், தேசியச் சமூக கட்சி மகாயுதி கூட்டணியின் ஒரு பகுதியாக இருந்தது. மகாராட்டிரச் சட்டப்பேரவைத் தேர்தலில் இக்கட்சி ஆறு வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. இவர்களில் தௌண்ட் தொகுதியில் போட்டியிட்ட இக்கட்சியின் வேட்பாளர் ராகுல் குல் வெற்றி பெற்றார்.

தலைவர்

  • மகாதேவ் ஜாங்கர்

முக்கிய தலைவர்

  • ரத்னாகர் குட்டே, சட்டமன்ற உறுப்பினர், கங்காகேட், மகாராட்டிரா மாநிலத் தலைவர்

மேலும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads