தேசியத் தகவல் மையம் (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேசிய தகவலியல் மையம் (National Informatics Centre) என்பது இந்திய அரசின் தகவல் தொடர்பியல் மற்றும் கணினி மயமாக்கல் அமைச்சகத்தின் மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் துறையின் கீழ் செயல்படும் ஒரு அமைப்பாகும்.[4][5] இந்த அமைப்பானது விஞ்ஞான யுகத்தில் நவீன இந்தியாவை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியான கணினி மயமாக்கலுக்கு இந்த அமைப்பு பேருதவி புரிகிறது. அரசாங்க வலைதளங்களை வடிவமைப்பது, அவற்றை பராமிப்பது, அரசு சேவைகளை கணினி மயமாக்குவது, அரசு அலுவலர் கணினி கணக்குகளை நிர்வகிப்பது, அரசாங்க வலைதளங்களுக்கு முகவரி ஒதுக்கீடு செய்வது போன்ற பணிகளை இவ்வமைப்பு செய்து வருகிறது.[6]

விரைவான உண்மைகள் சுருக்கம், உருவாக்கம் ...
Remove ads

நிர்வாகம் மற்றும் அமைப்பு

இவ்வமைப்பு இணைய விபர மேலாளரின் கீழ் இயங்குகிறது.அவருக்கு உதவியாக இணைய பராமரிப்பு அணி செயல்படுகிறது. இணைய பராமரிப்பு அணி என்பது முதுநிலை தொழில்நுட்ப இயக்குநர்,தொழில்நுட்ப இயக்குநர்,முதன்மை மின்னணு அமைப்பு பகுத்தாய்நர்,மின்னணு அமைப்பு பகுத்தாய்நர் ஆகியோரைக் கொண்டுள்ளது.[7]

வரலாறு

பெருக வந்த நவீன யுகத்தின் கணினி மயமாக்கல் தேவைகளைக் கருத்தில் கொண்டு அதனைச் சமாளிக்கும் விதத்தில் இந்திய அரசாங்கத்தால் 1976ஆம் ஆண்டு இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அன்று முதல் இன்று வரை இந்திய நாட்டின் மத்திய அரசு, 36 மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள்,688 மாவட்ட நிருவாகங்களின் கணினி மயமாக்கல் தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளது.[8]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads