தேவிபுரம் (முல்லைத்தீவு)

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள இடம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேவிபுரம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது முல்லைத்தீவுக்கு வடமேற்கே சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் தேவிபுரம் Thevipuram, நாடு ...

இந்த கிராமம் இரண்டு பெரும் குடியேற்றங்களை கொண்ட ஒரு கிராமம் ஆகும். "அ" பகுதி, "ஆ" பகுதி என்று குறிப்பிடப்படும் இரண்டு குடியேற்ற பகுதிகளை கொண்ட கிராமமாகும்.

இதன் எல்லைகளாக கிழக்கில் நாவலடியாறும் மேற்கில் மாருதப்புரவீகவல்லி ஆறும் தெற்கில் A 35 பிரதான வீதியும் வடக்கில் சிறுகடலும் காணப்படுகிறது.

தென்னை பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பு செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்ட இக் கிராமத்தில் இன்றும் தென்னை பயிர்ச்செய்கையே பிரதானமாக காணப்படுகின்றது.

ஆரம்ப காலத்தில் யாழ்ப்பாண மக்களின் குடியேற்ற கிராமமாக இருந்த போதும் இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரினால் திருகோணமலை மட்டக்களப்பு மலையகம் போன்ற பகுதிகளில் இருந்தும் பெருமளவு மக்கள் இந்த கிராமத்தில் குடியேறி உள்ளனர்.

Remove ads

பாடசாலைகள்

தேவிபுரம் அரச தமிழ் கலவன் பாடசாலை

கோயில்கள்

•தேவிபுரம் நவமணி பிள்ளையார் கோயில்

•தேவிபுரம் முனியப்பர் கோயில்

•தேவிபுரம் சிந்தாமணி பிள்ளையார் கோயில்

•தேவிபுரம் நாகதம்பிரான் கோயில்

•தேவிபுரம் பத்ரகாளி அம்மன் கோயில்

•நகரேஸ்வரர் ஆலயம் (சிவன் கோயில்)

•முத்துமாரியம்மன் கோவில்- பாரதி வீதி

•முத்துமாரியம்மன் கோயில்- கணேஷ் குடியிருப்பு

•கண்ணன் கோயில் - கணேஷ் குடியிருப்பு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads