தொழிற்சங்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தொழிற்சங்கம் (பிரித்தானிய ஆங்கிலம் மற்றும் ஆஸ்திரேலிய ஆங்கிலம் – trades union), தொழிலாளர் சங்கம் (கனடிய ஆங்கிலம்:labour union) தங்களது தொழிலில் ஈடுபடுவோரிடையே ஒற்றுமையைப் பேணுதல், (சம்பளம், கூடுதல் பணிநேரக் கூலி, மருத்துவச்செலவுகள், ஓய்வுக்கால ஆதரவு போன்றவற்றில்) கூட்டு ஆதாயம் பெறுதல், ஓர் பணியை முடிக்க போதுமான வேலையாட்களை அமர்த்த முதலாளிகளிடையே வலியுறுத்துதல், பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தூண்டுதல், மேம்பட்ட பணியிடச் சூழலை ஏற்படுத்துதல் போன்ற பொது இலக்குகளை அடைவதற்காக ஒன்றுபட்ட தொழிலாளர்களின் அமைப்பாகும். தொழிற்சங்கம், தனது தலைவர்கள் மூலமாக, உரிமையாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி கூட்டு பேரம் மூலம் தொழிலாளர் உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். தொழிற்சங்கங்களின் முதன்மைக் குறிக்கோளாக "தங்கள் வேலைவாய்ப்பு நிலைகளை காப்பாற்றிக் கொள்வதும் மேம்படுத்திக் கொள்வதுமாகும்".[1] இந்தக் குறிக்கோளில் ஊதியம், பணி விதிகள், முறையீடு செய்முறைகள், பணியெடுப்பு, பணிநீக்கம் மற்றும் பதவி உயர்வுக்கான விதிகள், பிற வசதிகள்,பணியிடப் பாதுகாப்பு மற்றும் கொள்கைகள் அடங்கும்.
பொருளாதார சிக்கல்களாலும், வர்க்க முரண்பாடுகளாலும் தொழிலாளி வர்க்கத்தினரிடையே உருவாகும் வர்க்க உணர்வினாலும் உந்தப்படும் தொழிலாளர்களால் ஒவ்வொரு நாடுகளிலும் தொழிற்சங்கங்கள் தோன்றுகின்றன. இந்த தொழிற்சங்கங்கள் முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்குமிடையே ஏற்படும் தொழில் தகராறுகளில் தொழிலாளர் நலனுக்கு உதவுகின்றன. மேலும் தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய கூலி, சலுகைகள் போன்றவற்றைப் பெற்றுத்தர தொழிற்சங்கங்கள் போராடுகின்றன. இந்த தொழிற்சங்கங்களில் பல ஏதாவதொரு அரசியல் கட்சியைச் சார்ந்து இருப்பதால் அந்த அரசியல் கட்சியின் அறிவுறுத்தலின்படி நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால் தொழிலாளர்கள் பிரச்சனைகளில் சரியான தீர்வு என்பது இந்தியாவில் இப்போது கேள்விக்குறியதாகி விட்டது.[சான்று தேவை]
Remove ads
தொழிற்சங்கங்கள் பட்டியல்
இந்தியாவிலுள்ள சில தொழிற்சங்க அமைப்புகள்
- இந்திய தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (INTUC) - இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்க அமைப்பு
- இந்திய தொழிற் சங்க மையம் (CITU) - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க அமைப்பு
- இரயில்வே தொழிலாளர்கள் சங்கம் (RMU) -
- தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (LPF) - திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் தொழிற்சங்க அமைப்பு
- ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டமைப்பு(ULF)
- இந்து மஸ்தூர் சபா (HMS)
- பாரதிய மஸ்தூர் சங்கம் (BMS)
- தமிழ்நாடு ஓட்டுநர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலச்சங்கம்
- நாம் தமிழர் தொழிலாளர் தொழிற்சங்கம்
- இடது தொழிற்சங்க மையம் (LTUC)
- அகில இந்திய தொழிற்சங்கங்களின் மத்திய கவுன்சில் (AICCTU)
- அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC)
- சென்ட்ரல் ஆர்கனைஷேசன் ஆஃப் இந்தியன் ட்ரேட் யூனியன்ஸ் (COITU)
Remove ads
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads