தோ பாயோ வைராவிமட காளியம்மன் கோயில்
சிங்கப்பூரிலுள்ள ஓர் அம்மன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வைராவிமட காளியம்மன் கோயில் என்பது சிங்கப்பூர் நாட்டின் தோ பாயோ என்ற நகரில் அமைந்துள்ள ஓர் அம்மன் கோயில் ஆகும்.[1] இக்கோயிலின் மூலவர் காளியம்மன் ஆவார்.
Remove ads
விபரங்கள்
சிங்கப்பூரிலுள்ள இந்து அறக்கட்டளை வாரியம் கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்கும் கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[2] சிங்கப்பூரின் பழைமையான கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[3] கில்லினி சாலை மற்றும் ஆர்ச்சர்ட் சாலை சந்திப்பில் 1860ஆம் ஆண்டு இக்கோயில் சிறியதாகக் கட்டப்பட்டது. மக்களுக்கு போக்குவரத்தை எளிதாக்கும் காரணங்களால், 1921ஆம் வருடம் சோமர்செட் சாலையில் இக்கோயில் புனர் பெற்றது. மீண்டும் சில காரணங்களால் இடமாற்றம் செய்யப்பட வேண்டி, தற்போதைய தோ பாயோ பகுதியில், 1982ஆம் ஆண்டு இக்கோயில் மீண்டும் நிறுவப்பட்டது. புனரமைக்கப்பட்ட இக்கோயிலின் கும்பாபிசேகம் 1986ஆம் வருடம் மார்ச்சு மாதம் நடைபெற்றது.
Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 7.18 மீ. உயரத்தில், (1.3350°N 103.8591°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, சிங்கப்பூரில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.
திருவிழாக்கள்
வருட பிரம்மோற்சவம், நவக்ஸ்ரீ ஹோமம், கொடியேற்றம் மற்றும் இரத ஊர்வலம் ஆகியவை இக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களாகும்.
இதர தெய்வங்கள்
துர்க்கை, விநாயகர், முருகன், ஐயப்பன், குருவாயூரப்பன், பெரியாச்சி அம்மன், அங்காள பரமேசுவரி மற்றும் மதுரை வீரன் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads