ந. தெய்வசுந்தரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ந. தெய்வசுந்தரம் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் 1 சூன் 1950இல் பிறந்தவர். இவரது பெற்றோர் சிவநயினார்-பாப்பு அம்மாள்.
கல்வி
- இளங்கலைப் பட்டம் (இயற்பியல்)
- முதுகலைப் பட்டம் (தமிழ், மொழியியல்)
- முனைவர் பட்டம் (தமிழ், மொழியியல்)
பணி
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறைத் தலைவராகப் பணியாற்றியவர். தமிழ் மொழியியல் ஆய்வாளராகவும் பேராசிரியராகவும் திகழ்ந்தவர்.
சிறப்பு
- கணினிமொழியியில் வல்லுநர்.
- சென்னைப் பல்கலைக்கழகத்தில் கணினிமொழியியலுக்காக முதுகலைப் பட்டப்படிப்பைத் தொடங்கியவர்.
- கணினிவழித் தமிழ்க்கல்வியைத் தொடங்கியவர்.
- கோடிக்கணக்கான வார்த்தைகளைத் திருத்துகின்ற 'மென்தமிழ்' என்ற மென்பொருளை உருவாக்கியவர்.[1]
பெற்ற விருது
2013-ஆம் ஆண்டின் “முதலமைச்சர் கணினித் தமிழ் விருது”
மேற்கோள்கள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads