நடுபழனி மரகத தண்டாயுதபாணி கோயில்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நடுபழனி மரகத தண்டாயுதபாணி கோயில் (ஆங்கிலம்: Nadupalani Maragatha Dhandayuthapani Temple) என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் மேல்மருவத்தூர் பகுதிக்கு அருகிலுள்ள அச்சரப்பாக்கம் புறநகர்ப் பகுதியின் பெருக்கரணை கிராமத்தில் அமையப் பெற்றுள்ள ஒரு முருகன் கோயில் ஆகும்.[2][3] சுமார் மூன்றடி உயரமுள்ள மரகதக் கல்லாலான மூலவர் தண்டாயுதபாணி இக்கோயிலில் அருள்பாலிக்கிறார்.[4] பழனி மலை தண்டாயுதபாணி மூலவரைப் போலவே இக்கோயிலின் மூலவரும் காட்சியளிக்கிறார்.[5] காஞ்சிப் பெரியவர் இக்கோயிலுக்கு விஜயம் செய்து, நடுபழனி என்ற திருநாமத்தை இத்தலத்திற்கு சூட்டியுள்ளார்.[6] 2022ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 14ஆம் நாள் இக்கோயிலுக்கு கும்பாபிசேகம் நடைபெற்றுள்ளது. வேம்பு மற்றும் அரச மரங்கள் இத்தலத்தின் விருட்சங்களாகும். சுமார் 45 அடி உயரமுள்ள முருகன் சிலை ஒன்று இக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் நடுபழனி மரகத தண்டாயுதபாணி கோயில், ஆள்கூறுகள்: ...

கடல் மட்டத்திலிருந்து சுமார் 99 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நடுபழனி மரகத தண்டாயுதபாணி கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 12.3842°N 79.8721°E / 12.3842; 79.8721 ஆகும்.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads