அச்சரப்பாக்கம்
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
அச்சரப்பாக்கம் அல்லது அச்சிறுபாக்கம் (Acharapakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
Remove ads
அமைவிடம்
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த அச்சிறுபாக்கம் பேரூராட்சி, மாவட்ட தலைமையகமான செங்கல்பட்டிலிருந்து 39 கி.மீ. தொலைவிலும் மற்றும் மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 96 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. அச்சரப்பாக்கத்தில் தொடருந்து நிலையம் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
7.95 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 123 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி மதுராந்தகம் (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,565 வீடுகளும், 10,362 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 89.80% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1012 பெண்கள் வீதம் உள்ளனர்.[4]
கோயில்கள்
அச்சரபாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில் அமைந்துள்ளது. விநாயகரை வணங்காது திரிபுரம் எரிக்கச் சென்ற இறைவனுடைய தேர் அச்சு முறிந்த இடம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
இறைவன் | பாக்கபுரேசுரர்[5] |
இறைவி | சுந்தரநாயகி |
தீர்த்தம் | வேததீர்த்தம் |
விருட்சம் | கொன்றை |
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads