நந்தியம்பாக்கம்

இந்தியாவின் தமிழ்நாடு மாநில கிராமம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

நந்தியம்பாக்கம் (Nandiambakkam ) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில்[2]சென்னையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு புறநகர் பகுதியாகும்.[3]சென்னை நகரத்தின் வடக்குப் பகுதியான இங்கு சுமார் 17,000 மக்கள் வசிக்கின்றனர். சென்னை புறநகர் தொடருந்து வலையமைப்பில் நந்தியம்பாக்கம் தொடருந்து நிலையமும்[4]அரசு பேருந்து சேவைகளும் இக்கிராமத்திற்கு போக்குவரத்து சேவையை அளிக்கின்றன. குறிப்பாக மீஞ்சூர்-சென்னை உயர் நீதிமன்றம், மீஞ்சூர்-எண்ணூர் மற்றும் மீஞ்சூர் கோயம்பேடு பாதையில் செல்லும் பேருந்துகள் இச்சேவையை அளிக்கின்றன.

விரைவான உண்மைகள் நந்தியம்பாக்கம்Nandiambakkam, நாடு ...

சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான நந்தியம்பாக்கம், கல்வி, தொழில்மயமாக்கல், வேளாண்மை ஆகியவற்றில் வேகமாக வளர்ந்து வருகிறது. திருவொற்றியூரை விட இரண்டு மடங்கும், பொன்னேரியை விட மூன்று மடங்கும் பரப்பளவில் பெரிய மீஞ்சூர் கிராமம் நந்தியம்பாக்கத்திற்கு மிக அருகில் உள்ளது.

சென்னை நகரத்திற்கு ஒரு நாளைக்கு 100 மில்லியன் லிட்டர் தண்ணீரை வழங்கும் மீஞ்சூர் உப்புநீக்கும் ஆலை 2010 ஆம் ஆண்டு சூலை மாதம் 31 ஆம் தேதியன்று திறக்கப்பட்டது.

தெற்கு சென்னையை (தேசிய நெடுஞ்சாலை எண் 45 இல் உள்ள வண்டலூர்) வடக்கு சென்னையுடன் (மீஞ்சூர்) இணைக்கும் வெளிப்புற சுற்றுச் சாலை சென்னை பெருநகர மேம்பாட்டு அமைப்பின் இரண்டாவது பெருநகர சென்னை திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். இது நந்தியம்பாக்கம் பகுதியை உள்ளடக்கியுள்ளது. மேலும் இதன் அருகிலுள்ள கிராமமும் நகரமும் மெதுவாக பெருநகர சென்னையில் உள்ள மக்களின் குடியிருப்பு இடமாக மாறி வருகின்றன.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads