நல்லவன் வாழ்வான்
பி. நீலகண்டன் இயக்கத்தில் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நல்லவன் வாழ்வான் (Nallavan Vazhvan) என்பது 1961 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் குற்றவியல் பரபரப்பூட்டும் திரைப்படமாகும். இதை பி. நீலகண்டன் தயாரித்து இயக்கினார். நா. பாண்டுரங்கனின் கதைக்கு அண்ணாதுரை அவர்கள் திரைக்கதையும், உரையாடலும் எழுதியிருந்தார், எம். ஜி. ராமச்சந்திரன், ராஜசுலோச்சனா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நல்லவன் வாழ்வான் திரைப்படம் எம். ஜி. ராமச்சந்திரனுக்கு 50வது திரைப்படம் ஆகும். எம். கே. ஆத்மநாதன் மற்றும் வாலி ஆகியோரின் பாடல் வரிகளுடன் டி. ஆர். பாப்பா இசையமைத்துள்ளார். வாலி பாடல்கள் எழுதிய முதல் ராமச்சந்திரன் திரைப்படம் இதுவாகும். இப்படம் 31 ஆகஸ்ட் 1961 இல் வெளியிடப்பட்டது மற்றும் வசூல் ரீதியாக 80 நாட்கள் திரையரங்கில் ஓடி தோல்வியடைந்தது.
Remove ads
கதை
நல்லசிவன் (எம். ஆர். ராதா) என்ற பெண்ணாசைக் கொண்ட பணக்காரனின் சதியால் செய்யாத கொலைக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறார் முத்து (எம். ஜி. ஆர்). ஒரு கட்டத்தில் முத்து சிறையில் இருந்து தப்பிக்கிறார். உண்மையான குற்றவாளி யார் என்பதை முத்து கண்டறிந்து தன்னைக் குற்றமற்றவர் என முத்து நிரூபிப்பதே கதையாகும்.
நடிப்பு
- நடிகர்கள்
- முத்துவாக ம. கோ. இராமச்சந்திரன்
- நல்லசிவமாக எம். ஆர். ராதா
- காவல் ஆய்வாளர் மாதவனாக மா. நா. நம்பியார்
- நல்லசிவத்தின் கணக்குப்பிள்ளையாக டி. பாலசுப்ரமணியம்
- மேக்காப் மேகநாதனாக எஸ். ராமராவ்
- நடிகைகள்
- சந்திராவாக ராஜசுலோசனா
- செண்பகமாக ஈ. வி. சரோஜா
- முத்துவின் அம்மாவாக லட்சுமி பிரபா
- சாட்சியாக பி. எஸ். சீதாலட்சுமி
தயாரிப்பு
நல்லவன் வாழ்வான் படத்தை, அரசு பிக்சர்ஸ் என்ற பதாகையில் பி. நீலகண்டன் தயாரித்து இயக்கினார். நா. பாண்டுரங்கன் எழுதிய கதைக்கு கா. ந. அண்ணாதுரை திரைக்கதை உரையாடல் எழுதினார்.[1] இது எம். ஜி. ராமச்சந்திரனின் 50வது படமாகும்.[2] படத்திற்கான ஒளிப்பதிவை ஜி. துரை மேற்கொண்டார்.[1]
இசை
இப்படத்திற்கு டி. ஆர். பாப்பாவால் இசையமைத்தார்.[3] ம.கோ.இராவுக்கு வாலி எழுதிய பாடல் இந்தப் படத்தில்தான் இடம்பெற்றது.[4] இப்படத்தில் "சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்" என்ற பாடலை வாலி எழுதினார். சில காரணங்களினால் இப்பாடலை படக்குழுவினர் நிராகரித்து, ஏ. மருதகாசியிடம் புதிய பாடல் வரிகளை எழுதித்தர வேண்டும் என்று கேட்டனர். ஆனால் மருதகாசி வாலியின் பாடல் வரிகள் நன்றாக உள்ளதாகவும் அதையே வைத்துக் கொள்ளும்படி குழுவினரை சமாதானப்படுத்தினார்.[5] இந்தப் பாடலில் "உதயசூரியன் எதிரில் இருந்தால், உள்ளத் தாமரை மலராதோ" என்ற வரிகள் உள்ளன, இதில் "உதய சூரியன்" என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சி சின்னத்தைக் குறிக்கிறது.[6]
Remove ads
வெளியீடும் வரவேற்பும்
நல்லவன் வாழ்வன் 1961, ஆகத்து, 31 அன்று வெளியானது.[7] கல்கியின் காந்தன் படத்தை எதிர்மறையாக விமர்ச்சித்தார். படத்தின் நல்ல அம்சம் படம் நீண்டமாக இல்லாமல் 15,133 அடி (4,613 மீ) நீளம் இருப்பதே என்று கூறினார்.[8] இந்த படம் வணிக ரீதியாக மோசமாக இருந்தது. திரையரங்குகளில் 80 நாட்கள் ஓடியது.[1]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads