நாகர்கோவில் கிருஷ்ணன் கோயில்
என்பது தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவில் பகுதியின், கிருஷ்ணன்கோவ From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாகர்கோவில் கிருஷ்ணன் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவில் பகுதியின்,[3][4] கிருஷ்ணன்கோவில் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[5] குமரியின் குருவாயூர் (கன்னியாகுமரியின் குருவாயூர்) என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.[6]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 81 மீட்டர் உயரத்தில், 8.1962°N 77.4261°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, இந்த கிருஷ்ணன் கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலின் மூலவர் கிருஷ்ணன்; தாயார்கள் சத்யபாமா மற்றும் ருக்மணி ஆவர். சிவலிங்கம், கருடாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், விஷ்வக்சேனர், சாஸ்தா, நாகர் ஆகியோரும் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலின் தலவிருட்சம் நெல்லி மரம் ஆகும். கிருஷ்ண ஜெயந்தி, சித்ரா பௌர்ணமி, வைகுண்ட ஏகாதசி, சித்திரை பிரம்மோற்சவம் மற்றும் பங்குனி உத்திரம் ஆகியவை முக்கிய திருவிழாக்களாக இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads