நான் பிரகாசன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நான் பிரகாசன் (Njan Prakashan) என்பது 2018 இந்திய மலையாள- மொழியில் வெளிவந்த நையாண்டி நகைச்சுவைத் திரைப்படமாகும். இதை சீனிவாசன் என்பவர் எழுதி சத்யன் அந்திக்காடு என்பவர் இயக்கியுள்ளார். மேலும் நடிகர் பகத் பாசில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். புல்மூன் சினிமா என்ற நிறுவன பதாகையின் கீழ் சேது மன்னார்காடு என்பவர் படத்தை தயாரித்திருந்தார்.[1][2] இந்தப் படம் 2018 திசம்பர் 21 அன்று வெளியாகி, மிகவும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. திரையரங்க வசூலில், வெளியான 40 நாட்களில் உலகளவில் ₹ 52 கோடி வசூல் செய்தது. இது எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த மலையாளப் படங்களில் ஒன்றாகும்.
Remove ads
கதை
இது வெளிநாடுகளுக்கு, குறிப்பாக ஜெர்மனிக்கு செல்ல ஏங்கும் பிரகாசன் என்ற மனிதனின் கதையாகும். அவனது பெயர் சற்று பழமையானது என்று எண்ணி தனது பெயரை பி. ஆர். ஆகாஷ் என்று மாற்றிக் கொள்கிறான். ஒரு செவிலியராக தகுதி பெற்றிருந்தாலும், குறைந்த ஊதியம் மற்றும் நன்றியற்ற தன்மை காரணமாக செவிலியர் தொழிலில் நுழைவதற்கான யோசனையை விரும்பவில்லை. இத்தொழில் ஆண்களை விட பெண்களுக்கு மிகவும் பொருத்தமானது என்று நம்புகிறான். அவன் ஒரு வெளிநாட்டு குடிமகளை திருமணம் செய்துகொண்டு குடும்ப விசாவைப் பெறுவதன் மூலம் வெளிநாடு செல்ல தீவிரமாக முயற்சிக்கிறார்.
பிரகாசன் தனது காதலி சலோமி (நிகிலா விமல்) ஜெர்மனி செல்ல தனது நண்பர் கோபால் ஜி (சிறீனிவாசன்) என்பவர் உதவியை நாடுகிறான். ஆனால் சலோமி பிரகாசை ஏமாற்றுகிறாள். வெளிநாட்டில் வேறொரு நபருடன் சலோமின் புகைப்படத்தைப் பார்த்த பிரகாசன் அதிர்ச்சிக்கு ஆளாகிறான். கோபால் ஜி தன்னிடம் வாங்கிய தொகையை திருப்பிச் செலுத்த அவரது அறிவுறுத்தலின்படி ஒரு நோய்வாய்ப்பட்ட பெண்ணைக் கவனிக்க ஆண் செவிலியராக சேர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இப்போது கதை இந்த இருவருக்கும் இடையில் உருவாகும் நட்புப் பிணைப்பின் மூலம் நகர்கிறது.
பிரகாசன் கவனித்துக் கொள்ளும் அந்த நோயாளிப் பெண் எதிர்பாராத விதமாக இறந்துவிடுகிறாள். இது இவனுக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பிரகாசன் தன்னை ஒரு யதார்த்தமான மற்றும் அடித்தள மனிதனாக மாற்றிக் கொள்கிறான். செவிலியர் பணி என்பது வருமானத்திற்கான ஒரு வழி மட்டுமல்ல, மாறாக, தேவைப்படும் மக்களுக்கு உதவுவதற்கான ஒரு வழியாகும் என்பதை அவன் உணர்ந்து கொள்கிறான்.
Remove ads
இசை
இசையமைப்பாளர் ஷான் ரகுமான் சத்யன் அந்திகாடுடன் முதலில் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.[3]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads