நான்காம் தூத்மோஸ்

From Wikipedia, the free encyclopedia

நான்காம் தூத்மோஸ்
Remove ads

நான்காம் தூத்மோஸ் (Thutmose IV) பண்டைய எகிப்தின் புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட பதினெட்டாம் வம்ச பார்வோன்களில் எட்டாமவர் ஆவார். இவர் எகிப்தின் புது இராச்சியத்தை கிமு 1401 1391 அல்லது கிமு 1397 1388 முடிய ஆண்டார். இவரது மம்மியை 20-ஆம் நூற்றான்டில் உடற்கூராய்வு செய்யப்பட்டதில், இவர் கை-கால் வலிப்பு நோயால் இளவயதில் மாண்டார் எனத் தொல்லியல் உடற்கூராய்வியல் அறிஞர் கருத்து தெரிவித்துள்ளனர். இவருக்குப் பின் இவரது மகன் மூன்றாம் அமென்கோதேப் எகிப்தின் அரியனை ஏறினார்.

Thumb
நான்காம் தூத்மோஸ் நிறுவிய கனவு கற்பலகையில் பார்வோன் நான்காம் தூத்மோஸ் கீசாவின் ஸ்பிங்ஸ்களுக்கு காணிக்கை செலுத்தும் காட்சி
Thumb
அழகிய மணிமகுடம் அணிந்த நான்காம் தூத்மோஸ் சிற்பம்
Thumb
நான்காம் தூத்மோஸ் எகிப்திய தேவதையை அலங்கரிக்கும் காட்சி
விரைவான உண்மைகள் நான்காம் தூத்மோஸ், எகிப்தின் பாரோ ...
Remove ads

நினைவுச் சின்னங்கள்

Thumb
கர்னாக்கில் நான்காம் தூத்மோசின் கல்லறைக் கோயில்
Thumb
நான்காம் தூத்மோஸ் நிறுவிய கல் தூண் மண்டபம், கர்னாக்

பிற தூத்மோசிய பார்வோன்களைப் போன்று நான்காம் தூத்மோஸ் கர்னாக்கில் எகிப்திய கடவுள்களுக்கு பெரிய அளவிலான மண்டபங்களுடன் கோயில் எழுப்பினார். மேலும் தனக்கென சிறிய கோயில் ஒன்றையும் எழுப்பினார். கீசாவின் பெரிய ஸ்பிங்சின் இரு கால்களுக்கிடையே, தனது புனித மன்னராட்சி குறித்தான கனவு கற்பலகையை நிறுவினார்.[1][2]

Remove ads

கல்லறை மற்றும் மம்மி

Thumb
நான்காம் தூத்மோசின் மம்மி

நான்காம் தூத்மோஸ் இறந்த பிற்கு அவரது உடலை மம்மியாக பதப்படுத்தி மன்னர்களின் சமவெளியில் கலல்றை எண் 43-இல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடல் பின்னர் கல்லறை எண் 35-க்கு மாற்றப்பட்டது. நான்காம் தூத்மோசின் மம்மியை விக்டர் லோரெட்டால் 1898-இல் கண்டுபிடிக்கப்பட்டது.

நான்காம் தூத்மோசின் மம்மியை உடற்கூராய்வு செய்த கிராப்டன் எலியட் ஸ்மித் என்ற தொல்லியல் அறிஞரின் கூற்றுப்படி, நான்காம் தூத்மோஸ் ​ இறக்கும் போது அவர் மிகவும் மயக்கமடைந்திருந்தார் என்பது தெரியவந்தது. மேலும் அவரது உயரம் 1.646 மீட்டர் ஆகும்.ஆனால் பிரேத பரிசோதனையில் நான்காம் தூத்மோசின் கால்கள் உடைந்திருப்பதைக் கருத்தில் கொண்டு, வாழ்க்கையில் அவரது மிகவும் உயரமாக இருந்திருக்கலாம் என்றும், முன்கைகள் மார்பின் மீது வைத்து, வலதுபுறம் இடதுபுறம் கட்டப்பட்டுள்ளது என்றும், அவரது தலைமுடி, நடுவில் பிரிக்கப்பட்டுள்ளது என்றும் கருத்து தெரிவித்தார். எலியட் ஸ்மித் எனும் தொல்லிய ஆய்வாலர், நான்காம் தூத்மோஸ் இறக்கும் போது அவரது வயது 25-28 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர் என்று மதிப்பிட்டார்

அண்மையில் இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர், இளவயதில் மாண்ட நான்காம் தூத்மோஸ் மற்றும் இளவயதில் மரணமடைந்த பதினெட்டாம் வம்ச பார்வோன்களான துட்டன்காமன் மற்றும் அக்கெனதென் மம்மிகளுடன் பகுப்பாய்வு செய்தார். இளவயதில் மாண்ட மேற்படி பார்வோன்கள் கால்-கை வலிப்பு காரணமாக இறந்திருக்கலாம் என கருத்து தெரிவித்தார்.[3]இந்த வகையான கால்-கை வலிப்பு தீவிர ஆன்மீக தரிசனங்கள் மற்றும் சமயத்துடன் தொடர்புடையது கருதினார்.[4]

Remove ads

பார்வோன்களின் அணிவகுப்பு

3 ஏப்ரல் 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்த 18 பார்வோன்கள் மற்றும் 4 அரசிகளின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு அழகிய வண்டிகளில் ஏற்றி, அணிவகுப்பாக எடுத்துச் செல்லும் போது பார்வோன் நான்காம் தூத்மோஸ் மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது. [5][5]

படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Further reading

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads