நாற்றங்கால்

From Wikipedia, the free encyclopedia

நாற்றங்கால்
Remove ads

நாற்றங்கால் என்பது சாகுபடி செய்யப்படும் பயிர்களின் விதைகளை அவற்றின் வளர் சூழலுக்கு ஏற்றவாறு சேற்றுப் பாங்கிலோ, புழுதிப் பாங்கிலோ பாவி தனியாக வளர்த்து நடவிற்கு பயன்படுத்த பண்படுத்தும் இடமே ஆகும்.

Thumb
ஜப்பானில் நெற்பயிர் நாற்றங்கால்

நாற்றங்கால் வகைகள்

  1. சேற்று நாற்றங்கால்
  2. பாய் நாற்றங்கால்[1]
  3. புழுதி நாற்றங்கால்

சேற்று நாற்றங்கால்

இம்முறையில், வழக்கமான நெல் சாகுபடிமுறைக்கு 1 எக்டரில் நடவு செய்ய நாற்றங்கால் பரப்பு 20 சென்ட்டும், திருந்திய சாகுபடிமுறைக்கு 2.5 சென்ட்டும் தேவைப்படுகிறது. நாற்றங்கால் பரப்பு நன்கு நீர் வளம் மிகுந்தும், வடிகால் அமைப்பு உள்ளதாகவும் இருக்க வேண்டும்[2].

பாய் நாற்றங்கால்

பாய் நாற்றங்காலில் விதைகளை கான்கிரீட் தரை, பாலிதீன் தாள் அல்லது நாற்று தட்டு[3] போன்ற திடமான மேற்பரப்பில், மெல்லிய அடுக்கில் பரப்பிய மண் கலவையின் மேல், விதை முளைவிட்டு அதன் முளைவேர் 2-3 மிமீ நீளம் வந்த நிலையில் சீராக விதைக்க வேண்டும்[2]. தேனி அரண்மனைபுதூரில் இஸ்ரேல் தொழில் நுட்பத்தில் குழிதட்டு காய்கறி நாற்றுகளால் 30 சதவீத மகசூல் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது[4].

புழுதி நாற்றங்கால்

புழுதி நாற்றங்கால் முறை போதுமான அளவு நீர் வசதி அல்லது கால்வாய் நீர் இல்லாத இடங்களுக்கு ஏற்ற முறையாகும்[2].

Remove ads

நாற்றங்காலில் பூச்சிக் கட்டுப்பாடு

தற்பொழுது பெரும்பாலும், நாற்றங்காலில் தோன்றக் கூடிய பூச்சி, நோய்களை கட்டுப்படுத்த ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், பூச்சிகளுக்கு பூச்சிக்கொல்லிகளால் எதிர்ப்புத் தன்மை உருவாதல், திடீர் இனப்பெருக்கம், மறு உற்பத்தி, நன்மை செய்யும் பூச்சிகள் அழிந்து போதல், தானியங்களில் பூச்சிக்கொல்லிகளின் வீழ்படிவு தங்குதல், சுற்றுச்சூழல் சீர்கேடு, மனித இனம், கால்நடை, வனவிலங்குகள், நன்மைப் பயக்கும் பூச்சி இனங்களில் நச்சுத்தன்மை ஊடுருவல் போன்ற பின் விளைவுகள் ஏற்படக்கூடும்[5]. எனவே மாற்று வழிமுறைகளை (நாற்றங்கால் அமைக்கும் முறை, விதை நேர்த்தி, தண்ணீர், வேப்ப எண்ணெய் ஆகியவற்றை சரியான முறையில் உபயோகப்படுத்துவது, நாற்றங்காலில் 'டி' வடிவ குச்சிகள் நடுவது, உயிரிப்பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது, சீத்தாப்பழக் கொட்டைகள் ஊறவைத்த நீர், புதங்கம் எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்துவது, நாற்றங்கால் வரப்புகளை புல், பூண்டு, களைகள் இல்லாதவாறு செதுக்கி சுத்தமாக வைத்திருப்பது) ஒருங்கிணைந்த முறையில் கடைப்பிடித்து பூச்சி, நோய்களைக் கட்டுப்படுத்தி மேலாண்மை செய்வது சிறந்ததாகும்[5].

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads