நாலு வேலி நிலம்
முக்தா சீனிவாசன் இயக்கத்தில் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாலு வேலி நிலம் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தி. ஜானகிராமன் கதை, உரையாடல் எழுத, எஸ். வி. சகஸ்ரநாமம் தயாரிக்க முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. சகஸ்ரநாமம், குலதெய்வம் ராஜகோபால், எஸ். வி. சுப்பையா, முத்துராமன், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
தி. ஜானகிராமன் எழுதிய நாலு வேலி நிலம் என்ற நாடகத்தை எஸ். வி. சகஸ்ரநாமம் தனது சேவா ஸ்டேஜ் நாடகக் குழு மூலமாக மேடையேற்றி, அது பெரும் வரவேற்பைப் பெற்றது. எனவே இந்த நாடகத்தை எஸ். வி. சகஸ்ரநாமமே திரைப்படமாக தயாரித்தார். இப்படமானது தஞ்சை மாவட்ட வழக்குமொழிப் பண்பாடு, வாழ்க்கை ஆகியவற்றைக் காட்சிப்படுத்துவதாக இருந்தது. என்றாலும் இத்திரைப்படம் வெற்றிபெறவில்லை என்கிறார் எஸ். ராமகிருஷ்ணன்.[4]
Remove ads
கதைச்சருக்கம்
சொந்தமாக நாலு வேலி நிலத்தை வாங்கவேண்டும் என்று கனவுகண்ட கண்ணுசாமி என்பவரின் வாழ்க்கைக் கதையாக இப்படம் உள்ளது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads