நாவி
ஒரு தமிழ்ச் சந்திப்பிழை திருத்தி. From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாவி (Naavi) என்பது ஒரு தமிழ்ச் சந்திப்பிழை திருத்தி ஆகும்.[1] இது சில மரபுப்பிழைகளையும் சரிசெய்யக்கூடியது.[2] இதனை வலைத்தள இடைமுகத்தினூடாகப் பயன்படுத்தமுடியும்.[3]
Remove ads
வரலாறு
இச்சந்திப்பிழை திருத்தியானது, நீச்சல்காரன் என்ற புனைபெயரைக் கொண்ட இராசாராமனால்[4] 2012இல் வெளியிடப்பட்டது.[3] தனது வலைப்பதிவில் சந்திப்பிழைகள் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து, சந்திப்பிழைகளைச் சரிசெய்வதற்கான ஒரு தமிழ் மென்பொருளாக நாவியை உருவாக்கினார்.[3] இது இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இதன் மூலம் 70% துல்லியமாகச் சந்திப்பிழைகளைத் திருத்த முடிவதாக (2012 சூலை 22இன்படி) நீச்சல்காரன் தெரிவித்தார்.[2]
Remove ads
சந்திப்பிழைகளைத் திருத்தும் முறை
தொல்காப்பியம், நன்னூல் ஆகிய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள நெறிமுறைகளையும் ஞானச்செல்வனின் "பிழையின்றித் தமிழ் பேசுவோம் எழுதுவோம்" என்ற நூலையும் தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடங்களையும் அடிப்படையாகக் கொண்டு, இம்மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.[5] ஒரு தமிழ்ச் சொற் பட்டியலை மூலமாகக் கொண்டு இம்மென்பொருள் சந்திப்பிழைகளைத் திருத்துகின்றது.[6]
வசதிகள்
நாவி வலைத்தளத்தில் ஒருங்குறியில் அமைந்த ஒரு தமிழ்க் கிளவியத்தை இட்டு, "ஆய்வு செய்" என்பதை அழுத்தியதும், தெளிவான சந்திப்பிழைகளையும் மரபுப்பிழைகளையும் வேறாகவும் மென்பொருளின் ஐயப்பாட்டுக்குரியவற்றையும் மென்பொருளால் பரிந்துரைக்கப்படுபவற்றையும் வேறாகவும் வெவ்வேறு நிறங்களில் காண்பிக்கும்.[7] பிளாகர் வலைப்பதிவுகளிலிருந்து இத்தளத்திற்கு நேரடியாக இணைப்புத் தரமுடியும்.[2] வாணி என்ற தமிழ் எழுத்துப்பிழை திருத்தியில், சந்திப்பிழைகளைக் கண்டறிவதற்காக இச்செயலி இணைக்கப்பட்டுள்ளது.[8]
இதனையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads