நியாயம் (இந்து தத்துவம்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நியாயம் என்பது தரிசனங்கள் எனப்படும் ஆறு தத்துவப் பிரிவுகளில் ஒன்று. இது ஏரணத்தையும் (அளவையியல், (logic)), அறிவாராய்ச்சியியலையும் (epistemology) முதன்மையாகக் கொள்கிறது. இந்தத் தத்துவப் பிரிவுக்கு அடிப்படையானது கௌதம ரிஷி அல்லது அட்சபாதர் என்பவரால் எழுதிய நியாய சூத்திரம் என்னும் நூல் ஆகும். இது கி.மு ஆறாவது நூற்றாண்டளவில் எழுதப்பட்டதாகக் கூறப்படுகின்றது.[1] [2] [3]

மேலோட்டம்

நியாயம் தத்துவப் பிரிவு நவீன இந்து தத்துவச் சிந்தனைகளுக்கு வழங்கிய முக்கியமான பங்களிப்பு அதன் வழிமுறை (methodology) ஆகும். தருக்கம் அல்லது ஏரணம் (அளவையியலை) அடிப்படையாகக் கொண்ட இந்த வழிமுறையைப், பின்னர், பெரும்பாலான மற்ற இந்து தத்துவப் பிரிவுகளும் கைக்கொள்ளலாயின.

நியாயத்தைப் பின்பற்றுபவர்கள், எற்புடைய அறிவைப் (valid knowledge) பெறுவதன் மூலமே துன்பங்களிலிருந்து விடுதலை பெற முடியும் என நம்புகிறார்கள். இதனால் அவர்கள் ஏற்புடைய அறிவைப் பெறுவதற்கான வழிகளை (பிரமாணங்கள்) அடையாளம் காண்பதில் பெரும் அக்கறை செலுத்துகின்றனர். நியாயத் தத்துவப் பிரிவினர் இந்த ஏற்புடைய அறிவை அடையாளம் காண நான்கு பிரமாணங்கள் அல்லது வழிமுறைகளைக் கைக்கொள்கிறார்கள். அவை:

  1. பிரத்தியட்சம் - நேரடிக்காட்சி
  2. அனுமானம் - உய்த்துணர்வு
  3. உபமானம் - ஒப்பீடு
  4. சப்தம் - உரைச்சான்று என்பனவாகும்.
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

இவற்றையும் பார்க்கவும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads