நியூயார்க்கு வேதாந்த சங்கம்

அமெரிக்காவில் உள்ள இந்து சங்கம் From Wikipedia, the free encyclopedia

நியூயார்க்கு வேதாந்த சங்கம்
Remove ads

நியூயார்க்கு வேதாந்த சங்கம் (Vedanta Society of New York) 1894 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்திய இந்து துறவி சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்டது. [1] [2] [3] [4] 1897 ஆம் ஆண்டில், இராமகிருட்டிணரின் மற்றொரு சீடரான சுவாமி அபேதானந்தா அமெரிக்காவிற்கு வந்து சங்கத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 1921 ஆம் ஆண்டு வரை சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். வேதாந்த சங்கமானது இஇராமகிருட்டிண மடத்தின் மத துறவற அமைப்பு மற்றும் இராமகிருட்டிணா சமயப் பரப்பு பணியகம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் நியூயார்க்கு வேதாந்த சங்கம் Vedanta Society of New York, பொதுவான தகவல்கள் ...
Remove ads

வரலாறு

நிறுவனம்

1893-ஆம் ஆண்டில் விவேகானந்தர் அமெரிக்கா சென்று சிகாகோவில் நடைபெற்ற உலக மதங்களின் நாடாளுமன்றத்தில் சேர்ந்தார். இந்து மதத்தையும் இந்தியாவையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதியாக அங்கு சென்றார். பாராளுமன்றம் முடிந்த பிறகு, அவர் மினியாபோலிசு, மெம்பிசு, டெட்ராய்ட் மற்றும் நியூயார்க் உட்பட பல அமெரிக்க நகரங்களுக்கும் பயணம் செய்தார். ஏறக்குறைய அவர் சென்ற இடமெல்லாம் அவருக்கு அன்பான வரவேற்பு கிடைத்தது. 1894 ஆம் ஆண்டு மே 16 ஆம் தேதி ஆர்ர்வர்டு பல்கலைக்கழகத்தில் விரிவுரை ஆற்றினார். நவம்பர் 1894 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் விவேகானந்தர் நியூயார்க் நகரத்தின் மன்காட்டனில் 54 மேற்கு 33 ஆவது தெருவில் இரண்டு வாடகை அறைகளில் முதல் வேதாந்த சங்கத்தை நிறுவினார். [5]

1894–1921

விவேகானந்தர் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் பல இடங்களுக்குப் பயணம் செய்து 1897 ஆம் ஆண்டில் இந்தியா திரும்பினார். இராமகிருட்டிணரின் மற்றொரு நேரடி சீடரான அபேதானந்தா, அதே ஆண்டில் அமெரிக்கா சென்று சங்கத்தின் பொறுப்பை ஏற்றார். அவர் 1921 வரை இந்தியா திரும்பும் வரை அதன் தலைவராக இருந்தார். ஒரு தலைவராக , அபேதானந்தா சங்கத்தை கட்டமைக்க உதவினார் மற்றும் சங்கம் நியூயார்க் சட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டது. [6]

1921 முதல் தற்போது வரை

Thumb

ஆரம்பத்தில் ஒரு வாடகை வீட்டில் இயங்கி வந்த சங்கம் பலமுறை இடமாற்றம் செய்யப்பட்டது. 1921 ஆம் அண்டில் சங்கம் 34 மேற்கு 71 ஆவது தெருவில் குடியேறி தலைமையகத்தை நிறுவியது. இதுவே சங்கத்தின் முகவரியாக உள்ளது. [3]

சங்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து ஆறு தலைவர்கள் இருந்துள்ளனர். சுவாமி ததாகதானந்தா 1977 ஆம் ஆண்டு முதல் 25 சூன் 2016 [3] இறக்கும் வரை தலைவராக இருந்தார். சுவாமி சர்வப்ரியானந்தா, நியூயார்க்கின் வேதாந்த சங்கத்தின் அமைச்சராகவும் ஆன்மீகத் தலைவராகவும் நியமிக்கப்பட்டு, 2017 ஆம் ஆண்டு சனவரி மாதம் 6, ஆம் தேதியன்று தனது கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

Remove ads

செயல்பாடுகள்

சங்கம் இராமகிருட்டிண மடத்தின் மதத் துறவற அமைப்பு மற்றும் இராமகிருட்டிணா பணியகம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் நூலகம், புத்தகக் கடை மற்றும் பிரார்த்தனை கூடம் ஆகியவற்றையும் சங்கம் கொண்டுள்ளது. அவர்கள் சிறீ இராமகிருட்டிணரின் நற்செய்தி குறித்து வாராந்திர விரிவுரை வகுப்புகளை நடத்துகிறார்கள். கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள் தொடர்ந்து ஏற்பாடு செய்யப்படுகின்றன. [7]

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads