நிலநடுக்கம் (இயற்கை நிகழ்வு)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நிலநடுக்கம் அல்லது நில அதிர்வு (quake) என்பது கோள் அல்லது நிலா அல்லது விண்மீன் போன்ற ஒரு வான்பொருளின் மேற்பரப்பு அதிரத் தொடங்குவது ஆகும். பொதுவாக நில அதிர்வு அலைகள், ஆற்றல் திடீரென்று வெளியிடப்படுவதால் ஏற்படும் விளைவாகும்.
நிலநடுக்கங்களின் வகைகள் பின்வருமாறு:
புவி நிலநடுக்கம்
புவி நிலநடுக்கம் என்பது புவியின் மேற்பரப்பில் சேமிக்கப்படும் ஆற்றலை திடீரென்று வெளியிடப்படுவதன் விளைவாக ஏற்படும் ஒரு நிகழ்வாகும் , இது நில அதிர்வு அலைகளை உருவாக்குகிறது. புவியின் மேற்பரப்பில் நிலநடுக்கங்கள் நிலத்தின் அதிர்வு அல்லது இடப்பெயர்ச்சி மூலம் தங்களை வெளிப்படுத்தலாம். சில நேரங்களில் இதுசுனாமியையும் ஏற்படுத்தலாம் , இது உயிர் இழப்புக்கும் சொத்துக்கள் அழிவுக்கும் வழிவகுக்கும். நிலநடுக்கம் என்பது புவியின் மேலோட்டுத் தட்டுகள் மோதிக் கொண்டு தரையில் தகைவை(அழுத்தச் செறிவை) ஏற்படுத்துவதால் ஏற்படுகிறது. தரையின் தகைவால் ஏற்படும் திரிபு பெரிதாகி,,பாறைகள் பிளந்து வழிவிட, தளப் பிளவுப் பிழைகள் ஏற்படுகின்றன.
Remove ads
நிலா நிலநடுக்கம்
நிலா நிலநடுக்கங்கள் புவி நில நடுக்கங்களை ஒத்தவையே. ஆனால், இவை வேரு காரணங்களால் ஏற்படுகின்றன. இவை முதலில் அப்பல்லோ விண்கலப் பயணிகளால் கன்டுபிடிக்கப்பட்டன.. மிகப் புரிய நிலா நிலநடுக்கங்கள் மிகப் பெரிய புவி நில நடுக்கங்களை விட மிகமிக வலிவு குறைந்தவையே. ஆனால், அவற்றின் நேரம் ஒரு மணி வரை அமையலாம். இது நிலாவில் இந்த அதிர்வுகளை ஒடுக்கவல்ல காரணிகள் இல்லாமையால் நீடிக்கிறது.[1]
நிலா நிலநடுக்கங்கள் பற்றிய தகவல்கள் 1969 முதல் 1972 வரை சந்திரனில் வைக்கப்பட்ட நில அதிர்வு அளவீடுகளிலிருந்து தெரியவருகின்றன. அப்பல்லோ 12, 15, 16 பயணங்களால் வைக்கப்பட்ட கருவிகள் 1977 இல் நிறுத்தப்படும் வரை சரியாக செயல்பட்டன.
குறைந்தது நான்கு வகையான நிலநடுக்கங்கள் உள்ளன:
- ஆழமான நிலநடுக்கங்கள் (மேற்பரப்புக்கு 700 கி. மீ. கீழே) - அநேகமாக அலைகளால் தோற்றம்[2][3][4]
- விண்கல் தாக்க அதிர்வுகள்
- வெப்ப நிலநடுக்கங்கள் (இரண்டு வார சந்திர இரவுக்குப் பிறகு சூரிய ஒளி திரும்பும்போது குளிர்ந்த சந்திர மேலோடு விரிவடைகிறது)[5]
- ஆழமற்ற நிலநடுக்கங்கள் (மேற்பரப்புக்கு 50 - 220 கிலோமீட்டர் கீழே)[6]
மேலே குறிப்பிடப்பட்ட முதல் மூன்று வகை நிலா நிலநடுக்கங்கள் இலேசான நிலநடுக்கங்களாக இருக்கலாம் , இருப்பினும் இந்தமேலீடான நிலநடுக்கம் உடல் அலை அளவுகோல் அளவில் mB=5.5 வரை பதிவு செய்யலாம்.[7] 1972 ஆம் ஆண்டுக்கும் 1977 ஆம் ஆண்டுக்கும் இடையில் 28 மேலீடான நிலா நிலநடுக்கங்கள் காணப்பட்டன. ஆழமான நிலநடுக்கங்கள் சில நேரங்களில் கூடுகள் அல்லது கொத்துகள் என்று குறிப்பிடப்படும் தனிமைப்படுத்தப்பட்ட கிலோமீட்டர் அளவிலான நிலத்திட்டுகளுக்குள் ஏற்படுகின்றன.[8]
Remove ads
செவ்வாய் நிலநடுக்கம்
செவ்வாய்க் கோளில் ஏற்படும் நிலநடுக்கம் செவ்வய் நிலநடுக்கம் ஆகும். செவ்வாயில். ஒவ்வொரு மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை நிலநடுக்கங்கள் ஏற்படக்கூடும் என்று 2012 ஆம் ஆண்டு ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.[9] இந்த பரிந்துரை செவ்வாய்க் கோளை மேலோட்டுத் தட்டுகளின் வரம்புகள் குறித்து அப்போது கிடைத்த சான்றுகளுடன் தொடர்புடையது.[10] சாத்தியமான செவ்வாய் நிலநடுக்கம் என்று நம்பப்படும் ஒரு நடுக்கம் நாசாவின் இன்சைட் லேண்டரால் ஏப்ரல் 6,2019 அன்று முதன்முதலில் அளவிடப்பட்டது , இது தரையிறங்கியின் முதன்மை அறிவியல் இலக்குகளில் ஒன்றாகும்.
வெள்ளி நிலநடுக்கம்
வெள்ளி நிலநடுக்கம் என்பது வெள்ளிக் கோளில் ஏற்படும் நிலநடுக்கமாகும்.
ஒரு வெள்ளி நிலநடுக்கம் ஒரு புதிய நிலத் திட்டையோ நிலச்சரிவையோ அல்லது இரண்டையுமோ உருவாக்கலாம். மெகல்லன் விண்கலம் 1990 நவம்பரில் வெள்ளியைச் சுற்றி முதலில் பறந்தபோது கண்ட நிலச்சரிவு பற்றிய படம் எடுக்கப்பட்டது. மெகெல்லன் இரண்டாவது முறையாக 1991 ஜூலை 23 ,அன்று வெள்ளியைச் சுற்றி வந்தபோதும் கண்ட மற்றொரு படம் எடுக்கப்பட்டது. ஒவ்வொரு படமும் 24 கிலோமீட்டர் (15 மைல்) குறுக்களவும் 38 கிலோமீட்டர்கள் (24 mi) நீளமும் கொண்டு இருந்தது. இது 2 மைல் தெற்கு அகலாங்கிலும் 74 மைல் கிழக்கு நெட்டாங்கிலும் அமைந்து இருந்தது. இந்த மகெல்லன் பட இணை, அப்ரோடைட்டு டெர்ரா எனும் ஒரு செஞ்சரிவான பள்ளத்தாக்கிற்குள் அமைந்த ஒரு பகுதியைக் காட்டுகிறது , இப்பகுதி பல பிளவுப்பிழை முறிவுகளால் ஆனதாகும் .
Remove ads
சூரிய நிலநடுக்கம்
சூரியன் மீது ஏற்படும் நிலநடுக்கமே சூரிய நிலநடுக்கம் ஆகும்.
சூரிய நிலநடுக்கங்களால் உருவாகும் நில அதிர்வு அலைகள் ஒளிக் கோளத்தில் நிகழ்கின்றன , மேலும் அவை மங்கி மறைவதற்கு முன்பு மணிக்கு 35,000 கிலோமீட்டர் (22,000 ) வேகத்தில் 400,000 கிலோமீட்டர் தொலைவு வரை பயணிக்க வல்லன.[11]
சூரிய நிலந்டுக்கம் 1996 ஜூலை 9 அன்று X2.6 வகை சூரிய வெடிப்பால் சூரியப் புறணிப் பொருண்மை உமிழ்வுடன் ஏற்பட்டது. நேச்சர் இதழில் இதை வெளியிட்ட ஆய்வாளர்கள் இந்த சூரிய ந்டுக்கம் புவிநிலந்டௌக்க அளவுகோலில் 1103 இரிக்ட்டர் அளவுக்குச் சமமானது எனக் கருத்துரைத்துள்ளனர். இதுபுவியில் 1906 இல் சான் பிரான்ன்சிசுக்கோவில் பேரழிவை உருவாக்கிய நிலநடுக்கம் வெளியிட்ட ஆற்றலைப் போல தோராயமாக, y 40,000 மடங்கை விட பெரியதும் புவியில் பதிவாகிய நிலநடுக்கங்களை விட பெரியதும் ஆகும். இந்த நிகழ்வு100–110 பில்லியன் டன் TNT அளவு ஆற்றலுக்கும் அல்லது 2 மில்லியன் இடைநிலை அளவு அணுகுண்டுகளுக்கும் சமமானதாகும். ஓர் இடைநிலை சூரியப் புறணி வெடிப்பு எப்படி இவ்வளவு பேராற்றல் நடுக்க அதிர்வலைகளை உருவாக்கி வெளியிட முடியும் என்பது விளங்கவில்லை.[11][12]
சூரியனை ஆய்வு செய்வதன் ஒரு பகுதியாக எசா(ESA)வும் நாசாவும் அனுப்பிய சோகோ(SOHO) விண்கலம் சூரிய நிலநடுக்கங்களைப் பதிவு செய்கின்றது.
Remove ads
விண்மீன் நிலநடுக்கம்
விண்மீன் நிலநடுக்கம் என்பது ஒரு நொதுமி விண்மீன் புறணி அல்லது மேலோடு புவி நிலநடுக்கத்தை ஒத்த திடீர் சரிசெய்தலால் ஏற்படும் ஒரு வானியற்பியல் நிகழ்வு ஆகும். விண்மீன் நிலநடுக்கங்கள் இரண்டு வெவ்வேறு இயங்கமைப்புகளின் விளைவாக ஏற்படுவதாகக் கருதப்படுகிறது. ஒன்று , நொதுமி விண்மீன் புறணியில் அல்லது மேலோட்டில் செலுத்தப்படும் மிகப்பெரிய அழுத்தங்கள் உருவாக்கும் உட்புற காந்தப்புலங்களில் முனைவான திருப்பங்களால் ஏற்படுகிறது. இரண்டாவது காரணம் தற்சுழற்சி இறக்கத்தின் விளைவாகும். நொதுமி விண்மீன் சட்டக இழுவை காரணமாக நேரியல் வேகத்தை இழப்பதால் , அப்போதுள்ள ஆற்றலின் வடிதல் சுழலும் காந்த இருமுனையமாகி மேலோட்டில் பேரளவு அழுத்தத்தை உருவாக்குகிறது. அது ஒரு குறிப்பிட்ட அளவைக் கடந்தவுடன் அது சுழலாத சமநிலைக்கு நெருக்கமான ஒரு வடிவத்திற்கு, ஒரு முழுமையான கோள வடிவத்துக்குத் தன்னைச் சரிசெய்கிறது.. உண்மையான மாற்றம் மைக்ரோமீட்டர்கள் அல்லது அதற்கும் குறைவான அளவிலேயே இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும், இது ஒரு நொடியின் ஒரு மில்லியனுக்கும் குறைவான நேரத்தில் நிகழ்கிறது.
மிக பெரிய பதிவு செய்யப்பட்ட விண்மீன் நிலநடுக்கம் ,2004, திசம்பர் 27 அன்று மீச்செறிவு உடுக்கண வான்பொருளான SGR 1806 - 20 இல் இருந்து கண்டறியப்பட்டது.[13] புவியில் இருந்து 50,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 1037 கிலோவாட்டு திறனுக்குச் சமமான காமா கதிர்களை வெளியிட்டது.புவியிலிருந்து 10 ஒளி ஆண்டுகள் தொலைவில் இது நிகழ்ந்திருந்தால் , இந்த நிலநடுக்கம் புவியில் மிகவும் பாரிய பேரழிவைத் தூண்டியிருக்கலாம்.
Remove ads
அறிவன்கோள்(புதன்) நிலநடுக்கம்
அறிவன் நிலநடுக்கம் என்பது அக்கோளில் ஏற்படும் நிலநடுக்கமாகும். 2016 ஆம் ஆண்டில் , கோளின் உட்புற குளிர்ச்சித் தாக்க அதிர்வுகள் அல்லது வெப்பம் அல்லது மையத்திலிருந்து கவசத்திலிருந்து எழும் அனற்குழம்பு காரணமாகனாறிவன் கோளில் நிலநடுக்கங்கள் ஏற்படலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. அதன் மேற்பரப்பில் விண்கலங்கள் எதுவும் தரையிறங்கவில்லை என்பதால் இது இன்னும் அளவிடப்படவில்லை அல்லது நிறுவப்படவில்லை.
மேலும் காண்க
- காந்த மீன்
- நொதுமி விண்மீன்
- துடிமீன்
- மென்மையான காமா மீள்பதிவி
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads