நிவித்திகலை

இலங்கையில் உள்ள இடம் From Wikipedia, the free encyclopedia

நிவித்திகலை
Remove ads

6°36′0″N 80°27′19.″E

விரைவான உண்மைகள்

நிவித்திகலை இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச சபை ஆகும்.நிவித்திகலை என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரத்தினதும் இப்பகுதி நிர்வகிகப்படும் பிரதேச செயளர் பிரிவின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான இரத்தினபுரி நகரத்தில் இருந்து தெற்குத் திசையில் அமைந்துள்ளது.

Remove ads

புவியியலும் காலநிலையும்

நிவித்திகலை சபரகமுவா குன்றுகள் என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 114 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 25 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.

மக்கள்

இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேச சபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:

மேலதிகத் தகவல்கள் பிரிவு, மொத்தம் ...

2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:

மேலதிகத் தகவல்கள் பிரிவு, மொத்தம் ...
Remove ads

கைத்தொழில்

இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை, இறப்பர், பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது. எனினும் இலங்கையின் இரத்தினக்கல் படிவுகள் காணப்படும் பிரதேசத்தில் இது அமைந்துள்ளதால் இரத்தினக்கல் அகழ்வு மற்றும் அது சார் கைத்தொழில்கள் முக்கிய இடம் வகிக்கின்றது.

அரசியல்

2006 உள்ளூராட்சிசபைத் தேர்தல் முடிவுகள்: நிவித்திகலை பிரதேசசபை

கட்சிவாக்குகள் சதவீதம் ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 24,32063.909
ஐக்கிய தேசியக் கட்சி 10,14726.663
மக்கள் விடுதலை முன்னணி 2,7007.091
ஏனைய 8902.35-
செல்லுபடியான வாக்குக்கள்3805794.61%-
நிராகரிக்கப்பட்டவை 21685.39%-
அளிக்கப்பட்ட வாக்குகள் 4022568.95%-
மொத்த வாக்காளர்கள் 58337**-

மூலம்:[1]

குறிப்புகள்

உசாத்துணைகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads