நீல குயில் (தொலைக்காட்சித் தொடர்)

From Wikipedia, the free encyclopedia

நீல குயில் (தொலைக்காட்சித் தொடர்)
Remove ads

நீல குயில் என்பது விஜய் தொலைக்காட்சி யில் திசம்பர் 17, 2018 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பான ஒரு பழகுக்குடி இனத்தின் பெண்ணின் வாழ்க்கை கதையை சொல்லும் தொலைக்காட்சி தொடர்.[1]. இந்த தொடர் வங்காளி மொழி தொடரான 'இஷ்தி குதும்' எனும் தொடரின் தமிழ் பாதிப்பாகும்.[2]

விரைவான உண்மைகள் நீல குயில், வகை ...

இந்தத் தொடரில் ஜெய் சூர்யாவாக புதுமுக நடிகர் சத்யா நடிக்கிறார். ஸ்நிஷா இந்தத் தொடரில் கதாநாயகி சிட்டுவாக நடிக்க. ராணியாக நடிகை சந்தனா நடித்துள்ளார். இந்த தொடர் இவர்களின் முதல் தமிழ் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயக்குமார் இயக்கும் இத் தொடருக்கு ராஜிவ் அட்டுகல் இசையமைக்கிறார். இந்த தொடர் 24 ஆகத்து 2019 அன்று 211 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

Remove ads

கதைச்சுருக்கம்

பழங்குடியினரின் ஊரைப் பற்றி தெரிந்து கொள்ள வரும் ஜெய்சூர்யாவை சிட்டு என்னும் பழங்குடி கிராமத்து பெண் சூழ்நிலை காரணமாக கட்டாயத் திருமணம் செய்து கொள்ள நேரிடுகிறது. ஜெய் சூர்யா, ராணி என்ற பெண்ணுடன் திருமண நிச்சயம் செய்யப்பட்டவர். அந்த கிராமத்தினர் ஜெய் சூர்யாவுடன் சிட்டுவை அனுப்பி வைக்கின்றனர்.

ஜெய் சூர்யா, சிட்டுவுடன் திருமணம் ஆனதை குடும்பத்தினரிடம் மறைத்து விடுகிறார். அந்த வீட்டிலேயே சிட்டுவும் வேலைக்காரியாகத் தங்கி விடுகிறார். சிட்டு, தனக்கும், ஜெய்யுக்கும் திருமணம் ஆனதை குடும்பத்தினரிடம் எப்படி தெரிவிப்பார், ராணிக்கு ஜெய் சூர்யாவுக்கும் திருமணம் நடக் குமா? இல்லை சிட்டு, ஜெய் சூர்யாவின் காதலை வெல்வாரா என்பது தான் கதை.

Remove ads

நடிகர்கள்

முதன்மை கதாபாத்திரம்

  • சத்தியா - ஜெய் சூர்யா
  • ஸ்நிஷா சந்திரன் - சிட்டு ஜெய் சூர்யா
  • சந்தனா செட்டி - ராணி

சூர்யா குடும்பத்தினர்

  • சபிதா நாயர் - கல்யாணி (சூர்யாவின் அம்மா)
  • --- - பாலா முருகன் (சூர்யாவின் தந்தை)
  • சத்தீஸ் --- (சூர்யாவின் மாமா)
  • --- - சந்திரா (சூர்யாவின் அத்தை)
  • வசந்த கோபிநாத் - சரவணன்
  • --- - ஜெயந்தி

சிட்டு குடும்பத்தினர்

  • சேரு - தெய்வானை (சிட்டுவின் அம்மா)
  • பி. ஆர். வரலட்சுமி - (சிட்டுவின் பாட்டி)
  • --- - மாத்வான்/மாசி (சித்துவின் வளர்ப்பு தந்தை, ஒரு கொள்ளைக்காரர்)

ராணி குடும்பத்தினர்

  • --- - சரத் சந்திரன் (ராணியின் தந்தை)
  • ரஷ்மி ஹரிபிரசாத் - ராதாமணி (ராணியின் தாயார்)
  • --- - கமலா (ராணியின் அத்தை)
Remove ads

நடிகர்களின் தேர்வு

இது ஒரு குடும்ப கதை களம் கொண்ட தொடர், இந்தத் தொடரில் ஜெய் சூர்யாவாக சத்யா நடிக்கிறார். இவர் முதல் முறையாக தமிழ் தொலைக்காட்சியில் நடிக்கும் தொடர் இதுவாகும். மலையாள பதிப்பில் நடிக்கும் ஸ்நிஷா இந்தத் தொடரில் கதாநாயகி சிட்டு வாகவே நடித்துள்ளார். ராணியாக நடிகை சந்தனா நடிக்கிறார். இவர் தெலுங்கு தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமானவர். இவருக்கும் இது முதல் தமிழ் தொடர்.

இவற்றை பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads