நெமிலிச்சேரி அகத்தீசுவரர் கோயில்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நெமிலிச்சேரி அகத்தீசுவரர் கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் குரோம்பேட்டை பகுதிக்கு அருகிலுள்ள நெமிலிச்சேரி புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1][2][3][4]

விரைவான உண்மைகள் நெமிலிச்சேரி அகத்தீசுவரர் கோயில், ஆள்கூறுகள்: ...

கடல் மட்டத்திலிருந்து சுமார் 51 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நெமிலிச்சேரி அகத்தீசுவரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள் 12.9480°N 80.1619°E / 12.9480; 80.1619 ஆகும்.

இக்கோயிலின் மூலவர் அகத்தீசுவரர் மற்றும் இறைவி ஆனந்தவல்லி தாயார் ஆவர். இவர்களது சன்னதிகளுடன், சூரியன், சந்திரன் மற்றும் பைரவர் சன்னதி குறிப்பிடத்தக்கவை ஆகும். இக்கோயிலின் தலவிருட்சம் அரசமரம் மற்றும் தீர்த்தம் அகத்திய புஷ்கரணி ஆகும்.[5]

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிற கோயில்களில் திருப்பணிகள் நடக்கவுள்ள 55 கோயில்களில், நெமிலிச்சேரி அகத்தீசுவரர் கோயிலும் ஒன்றாகும்.[6] இக்கோயிலின் குளத்தை செம்மைப்படுத்த, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.[7]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads