நெஸ் வாடியா

From Wikipedia, the free encyclopedia

நெஸ் வாடியா
Remove ads

நெஸ் நுஸ்லி வாடியா (பிறப்பு 30 மே 1971) ஓர் இந்தியத் தொழிலதிபர் ஆவார். பர்மா டிரேடிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார், இது பிரிட்டானியா நிறுவனத்தில் மறைமுகமான பெரும்பான்மை பங்குகள் வைத்திருப்பது உட்பட வாடியா குழுமத்தின் துணை நிறுவனங்களில் பெரும்பாலான பங்குகளை வைத்திருக்கும் நிறுவனமாகும்.[1][2] வாடியா குழுமத்தின் முதன்மை நிறுவனமான பாம்பே டையிங்கின் இணை நிர்வாக இயக்குநராக மார்ச் 2011 வரை இருந்தார்.[3] இந்தியன் பிரீமியர் லீக்கில் பஞ்சாப் கிங்ஸின் இணை உரிமையாளராக உள்ளார்.

விரைவான உண்மைகள் நெஸ் நுஸ்லி வாடியா, பிறப்பு ...
Remove ads

ஆரம்பகால வாழ்க்கை

மும்பையில் பார்சி வாடியா குடும்பத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் தொழிலதிபர் நுஸ்லி வாடியா மற்றும் முன்னாள் விமானப் பணிப்பெண் மவுரீன் வாடியா ஆவர்.[4] இவரது தந்தை நெவில் வாடியா மற்றும் தினா வாடியா ஆகியோரின் மகனாவார். இவரது தாத்தா சர் நெஸ் வாடியாவின் மகன் ஆவார், அவர் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பம்பாய் நகரத்தை உலகின் மிகப்பெரிய பருத்தி ஜின் வர்த்தக மையங்களில் ஒன்றாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகித்தார். இவருடைய பாட்டி பாக்கித்தானை நிறுவிய முகமது அலி ஜின்னாவின் மகளாவார்.

கதீட்ரல் & ஜான் கானன் பள்ளி மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள லாரன்ஸ் பள்ளி, பின்னர் இங்கிலாந்தில் உள்ள மில்ஃபீல்ட் பள்ளி ஆகியவற்றில் தனது கல்வியை முடித்த வாடியா, மாசசூசெட்ஸின் பாஸ்டனுக்கு அருகிலுள்ள டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் பிரிவில் பட்டம் பயின்றார்.வார்விக் பல்கலைக்கழகத்தில் பொறியியல் மேலாண்மைப் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[3]

Remove ads

தொழில் வாழ்க்கை

வாடியா 1993 இல் பாம்பே டையிங்கில் மேலாண்மைப் பயிற்சியாளராகச் சேர்ந்தார். ஆரம்பகாலங்களில் நிறுவனத்தின் ஜவுளிப் பிரிவின் சந்தைப்படுத்தல் மற்றும் சில்லறை விநியோகத்தில் ஈடுபட்டார். மேலும், பருத்தி ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுமம் , ஆலை உரிமையாளர்கள் சங்கம் மற்றும் அசோசியேட்டட் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் & இண்டஸ்ட்ரி ஆஃப் இந்தியா போன்ற பல்வேறு நிறுவனங்களில் தீவிரமாக செயல்பட்டார்.[5]

1998 இல், வார்விக் பல்கலைக்கழகத்தில் "இந்தியாவில் வெற்றிக்கு வழிவகுக்கும்" என்ற தலைப்பில் ஒரு ஆய்வறிக்கையுடன் பொறியியல் வணிக மேலாண்மை அறிவியல் துறையில் முதுகலைப் பட்டப்படிப்பை முடிக்க விடுப்பு எடுத்தார். 2001 இல் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, பாம்பே டையிங்கின் துணை நிர்வாக இயக்குநரானார், பின்னர் இணை நிர்வாக இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றார்.[6] ஆகஸ்ட் 1, 2001 இல் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார் மற்றும் மார்ச் 2011 வரை அந்தப் பதவியில் நீடித்தார்.இவர் பதவி விலகிய பிறகு, தம்பி ஜஹாங்கீர் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநராக நெஸ் நியமிக்கப்பட்டார்.[2]

1998, 1999 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கான பிரதம மந்திரி மன்றத்தில் நியமிக்கப்பட்டார் மற்றும் செப்டம்பர் 1998 இல் உணவு மற்றும் வேளாண் தொழில்கள் மேலாண்மைக் கொள்கைக்கான சிறப்புக் குழுவின் அமைப்பாளராக செப்டம்பர், 1998 இல் நியமிக்கப்பட்டார் [5]

நெஸ் வாடியா தற்போது பாம்பே பர்மா டிரேடிங் நிறுவன குழுமத்தின் நிர்வாக இயக்குநராகவும், நேஷனல் பெராக்சைடு குழுமத்தின் தலைவராகவும் பணியாற்றுகிறார்.[5] பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், பாம்பே டையிங், கோஏர் மற்றும் வாடியா டெக்னோ இன்ஜினியரிங் சர்வீசஸ் போன்ற பல்வேறு வாடியா குழும நிறுவன வாரியங்களில் இயக்குனராகவும் பணியாற்றுகிறார். அவர் கோஏர்,பிரிட்டானியா,பாம்பே, மற்றும் என்பிஎல் ஆகியவற்றின் தணிக்கைக் குழுக்களில் இடம்பெற்றுள்ளார். அறக்கட்டளையின் கீழ் குழுமத்தின் கல்வி நிறுவனங்களுடன் கூடுதலாக வாடியா மருத்துவமனைகளை மேற்பார்வையிடுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.[5]

Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads