நோட்ரே டேம் டி பாரிஸ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நோட்ரே டேம் டி பாரிஸ் (Notre Dame de Paris அல்லது பாரிஸ் அன்னை) என்பது ஒரு கோதிக் பேராலயம். மேற்கு நோக்கிய வாயிலோடு கூடிய இப் பேராலயம் பிரான்சின் தலைநகரமான பாரிசில் உள்ளது. இதுவே பாரிஸ் உயர் மறைமாவட்டத்தின் முதன்மைப்பேராலயமும், பேராயரின் இல்லமும் ஆகும். நோட்ரே டேம் டி பாரிஸ் பிரெஞ்சு கோதிக் கட்டிடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டாகப் கருதப்படுகின்றது. இது பிரான்சின் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞருள் ஒருவரான வயலே லெ டுச் என்பாரால் புதுப்பிக்கப்பட்டு அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டது. நோட்ரே டேம் என்பது பிரெஞ்சு மொழியில் எம் அரசி என்னும் பொருள் கொண்டது, இவ்வழக்கு பொதுவாக தமிழ் மரபில் எம் அன்னை எனக்கொள்ளப்படுகின்றது. மிகப் பழைய கோதிக் பேராலயங்களுள் ஒன்றான இதன் கட்டுமான வேலைகள் கோதிக் காலம் முழுவதிலும் நடைபெற்றது.கி. பி. 1163 ஆம் ஆண்டில் இந்தக் கோவிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.[2]
Remove ads
இப்போதைய நிலைமை
பிரெஞ்சு நாட்டின் பழம் அரசர்களின் நினைவுச் சிலைகள் அகற்றப்பட்டுள்ளன. சில சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. சுண்ணாம்புக் காரைகள் பெயர்ந்து தரையில் கிடக்கின்றன. 1793 இல் நடந்த பிரஞ்சு புரட்சியில் நடந்த வன்செயல்களாலும், இரண்டு உலகப் போர்களின் வன்முறையாலும், பராமரித்தல் குறைவினாலும் இந்தச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.[3] இருப்பினும் வரலாற்றுச் சிறப்புக் கொண்ட இந்தப் பேராலாயத்தை ஆண்டுதோறும் 12 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் பார்த்துச் செல்கிறார்கள். இதனை மீண்டும் சீர் செய்ய 114 மில்லியன் டாலர்கள் தேவைப்படும் என்றும் பணம் திரட்டும் முயற்சிகள் நடைபெறுகின்றன என்றும், ஐந்து ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என்றும் இப்பேராலயத்தின் நிர்வாகப் பேராயர் கூறியிருக்கிறார். 1831 ஆம் ஆண்டில் பிரெஞ்சு அறிஞர் விக்டர் ஹியூகோ இந்த ஆலயத்தின் கட்டடட இடிபாடுகளைச் சுட்டிக்காட்டி தமது நூலில் எழுதியிருந்தார். அதன் பலனாக 1844 இல் புனரமைப்பு வேலைகள் நடந்தன.
Remove ads
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads