பட்டணம், கோயம்புத்தூர்
கோயமுத்தூர் மாவட்ட ஊர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
எறிவீரப்பட்டணம் என்கிற பட்டணம் (Eriveera Pattanam, Coimbatore) என்பது தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு சிறப்பு நிலை பேரூராட்சி ஆகும். [2]
இன்றைக்கு ஒண்டிப்புதுருக்கு கிழக்கே, நீலாம்பூர் அருகில் உள்ள ஊருக்கு பெயர் பட்டணம், அதன் முழுப்பெயர் எறிவீரப்பட்டணம் என்பது. [3]
Remove ads
முன்பு, வணிகக்குழுக்கள் அரசர், நாட்டார், அல்லது ஊராரின் பாதுகாப்பை நம்பி இருக்காமல், தங்களின் சொந்த வீரர்களின் பாதுகாப்பில் ஏற்படுத்திக்கொண்ட காவல் நகரங்களையே "எறிவீரப்பட்டணம்" என்று குறிப்பிட்டனர். இவை எறிவீரதளம், வீரதாவளம் போன்ற வேறு சில பெயர்களாலும் அழைக்கப்பட்டன.[4]
ஊராட்சியாக இருந்த இந்த ஊர் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் சிறப்பு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[5][6]
Remove ads
அமைவிடம்
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கோயம்புத்தூரில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவிலும், சேலம் கொச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ளது. மேலும் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், சூலூரில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 488 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[7]
மேலும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads