பண்டார் சுங்கை லோங்

சிலாங்கூர், காஜாங்; செராஸ் பகுதியில் ஒரு நகரியம் From Wikipedia, the free encyclopedia

பண்டார் சுங்கை லோங்map
Remove ads

பண்டார் சுங்கை லோங் (ஆங்கிலம்; மலாய்: Bandar Sungai Long) என்பது மலேசியா, சிலாங்கூர், காஜாங்; செராஸ் பகுதியில் அமைந்துள்ள ஒரு நகரியம் ஆகும். 10,000 குடியிருப்பாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த நகர்ப்பகுதி, பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வசிக்கும் ஒரு வசதியான குடியிருப்பு புறநகர்ப் பகுதி என அறியப்படுகிறது.

விரைவான உண்மைகள் பண்டார் சுங்கை லோங் Bandar Sungai Long சிலாங்கூர், நாடு ...

இந்த நகரத்தில் பெரும்பான்மையான மக்கள் சீனர்கள் ஆவார்கள்; இருப்பினும் சிறுபான்மையினராக இந்தியர்கள் மற்றும் மலாய்க்காரர்கள் வசிக்கின்றனர்.

Remove ads

துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகம்

பண்டார் சுங்கை லோங்கில் துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகம் (Universiti Tunku Abdul Rahman) ஒரு வளாகத்தை இயக்கி வருகிறது.[1] இந்தப் பல்கலைக்கழகம் தற்போது காஜாங் நகராட்சி (Kajang Municipal Council) நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இங்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் வாராந்திர இரவுச் சந்தை (Pasar Malam) நடைபெறுவது வழக்கம்.

மலேசியாவின் 10-ஆவது பிரதமரும்; மற்றும் தற்போதைய பிரதமருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம், 2021 முதல் தம் குடும்பத்துடன் பண்டார் சுங்கை லோங்கில் வசித்து வருகிறார்.

Remove ads

போக்குவரத்து

புக்கிட் டுக்குங் எம்ஆர்டி நிலையத்தில் இருந்து பண்டார் சுங்கை லோங்கிற்கு ரேபிட் கேஎல் T453  பேருந்து மூலமாக அணுகலாம்.[2] அத்துடன் 590  பேருந்து மூலமாகவும் அணுகலாம்.[3]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads