பண்டார் துன் ரசாக்

கோலாலம்பூர் மாநகரத்தில் அமைந்து உள்ள புறநகரம். From Wikipedia, the free encyclopedia

பண்டார் துன் ரசாக்map
Remove ads

பண்டார் துன் ரசாக், (மலாய்: Bandar Tun Razak; ஆங்கிலம்: Bandar Tun Razak; சீனம்: 敦拉萨镇); என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரத்தில், அமைந்து உள்ள புறநகரம். உயர்க்கல்வி நிலையங்களுக்கு புகழ்பெற்ற இடமாக விளங்குகிறது. அத்துடன் தனித்த ஒரு நாடாளுமன்றத் தொகுதியாகவும் இயங்குகிறது.

விரைவான உண்மைகள் பண்டார் துன் ரசாக்Bandar Tun Razak, நாடு ...

மலேசியாவின் இரண்டாவது பிரதமர் துன் அப்துல் ரசாக்கின் நினைவாக இந்த நகரத்திற்குப் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. பண்டார் துன் ரசாக், சுங்கை பீசி உத்திநோக்கு மண்டலத்தில் (Bandar Tun Razak - Sungai Besi Strategic Zone) அமைந்து உள்ளது.[1]

Remove ads

அமைவு வசதிகள்

பண்டார் துன் ரசாக்கில், கோலாலம்பூர் காற்பந்து விளையாட்டரங்கம் (Kuala Lumpur Football Stadium); ஈருருளி சுற்றரங்கம் (Velodrome); ஒரு பொது நீச்சல் குளம், விளையாட்டு மையம்; மலேசிய தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை (Hospital Universiti Kebangsaan Malaysia); கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகத்தின் கிளை அலுவலகம்; போன்ற மற்ற வசதிகள் உள்ளன.[2]

மலேசிய தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை, தற்சமயம் துவாங்கு முக்ரிஸ் மருத்துவமனை (Hospital Canselor Tuanku Muhriz UKM) என்று அழைக்கப் படுகிறது.[3]

Remove ads

வரலாறு




Thumb

2022-இல் செராஸ் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:

  மலாயர் (62.1%)
  சீனர் (26.85%)
  இதர இனத்தவர் (2.31%)

[4]

பண்டார் துன் ரசாக் 1970-களில், கோலாலம்பூரில் ஒரு சிறிய நகரமாக இருந்தது. முன்னர் காலத்தில் கம்போங் காங்கோ (Kampung Konggo; Congo Village) என்று அழைக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் 1960-ஆம் ஆண்டுகளில், காங்கோ குடியரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற மலேசிய இராணுவ வீரர்களுக்கான குடியேற்றப் பகுதியாக இருந்தது.

கம்போங் காங்கோ

அதனால் அதற்கு கம்போங் காங்கோ என்று பெயரிடப்பட்டது. இந்தப் பகுதியில் 1990-ஆம் ஆண்டுகளில் புதிய நவீன வீடமைப்புகள் அமைக்கப்பட்டன. அவற்றில் காங்கோவில் பணியாற்றிய இராணுவ வீரர்களில் சிலருக்கு வீடுகள் கொடுக்கப்பட்டன. அவர்களில் சிலர் இன்னும் அங்கு வாழ்கின்றனர்.

1984 பிப்ரவரி 1-ஆம் தேதி மலேசியக் கூட்டாட்சி பிரதேசத்தின் 10-ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அப்போது மலேசியாவின் நான்காவது பிரதமர் துன் டாக்டர் மகாதீர் பின் முகமது அவர்களால், கம்போங் காங்கோ என்பது பண்டார் துன் ரசாக் என பெயர் மாற்றம் செய்யப் பட்டது.[5]

2008-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் மாற்றம்

1990-களின் பிற்பகுதியில், பண்டார் துன் ரசாக், செராஸ் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு, தனித்த ஒரு நாடாளுமன்றத் தொகுதியாக மாற்றப் பட்டது. 2008 பொதுத் தேர்தல் வரை, பண்டார் துன் ரசாக், அம்னோ மற்றும் பாரிசான் நேசனல் கூட்டணியின் கோட்டையாக இருந்தது.

2013-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணி, பண்டார் துன் ரசாக் தொகுதியைக் கைப்பற்றிக் கொண்டது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads