பதிமுகம்

தாவர இனம் From Wikipedia, the free encyclopedia

பதிமுகம்
Remove ads

பதிமுகம் (அ) பதாங்கம் என்று அறியப்படும் இத்தாவரத்தின் அறிவியற் பெயர் செசல்பானியா சப்பான் (Caesalpinia sappan) என்பதாகும். இதன் வேறுப்பெயர்களாக சப்பாங்கம், சப்பான் மரம், கிழக்கிந்திய செம்மரம், சாயக்கட்டா ஆகியன . இது சிசல்பினேசியக் குடும்பத்தைச் சார்ந்த செந்நிறச் சாயத்தைக் கொடுக்கும் தாவரமாகும். இதனை ஆங்கிலத்தில் சப்பான் என விளிக்கின்றனர். இது ஒரு பாரம்பரிய மருத்துவத் தாவரமாகும். இது இந்தியா மற்றும் பல ஆசிய நாடுகளில் இம்மரம் காணப்படுகிறது [1].

விரைவான உண்மைகள் பதிமுகம், காப்பு நிலை ...

இதனைத் தமிழ்நாட்டில் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள பத்தமடை என்னும் ஊரிலுள்ள பாய்த் தயாரிக்கும் நிறுவனங்களில் சாயமேற்றியாகவும் பயன்படுத்தப்படுகிறது. கோரையை நெய்வதற்கு முன் அதற்கு இயற்கைச் சாயமாக இதன் சாற்றை ஏற்றி பின் பாய் பிண்ணுகின்றனர். பத்தமடைப் பாய் உலகப்புகழ் பெற்றதாகும் [2]. இதன் சாற்றுடன் காயா மரச் சாறையும் சேர்க்க கருப்பு, சிவப்பு மற்றும் ஊதா நிறங்களையும் பெற முடியும்.

இதனை கொதிக்க வைத்த நீருடன் பதிமுகப் பட்டையை இடுவதன் மூலம் நீரின் நிறம் மாறுகிறது. இந்நீரைப் பருகும் பழக்கம் கேரளப் பகுதிகளில் பரவலாகக் காணப்படுகிறது. இம்மரத்தின் தோற்றம் குறித்து அறியப்படவில்லை ஆயினும் இவை தென்னிந்தியாவில் பரவலாகக் காணப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் ஸப்பான்; மலையாளத்தில் சப்பாங்கம், பதிமுகம்; இந்தியில் வகும், வாக்கும்; கன்னடத்தில் சப்பான் மர எனவும் விளிக்கின்றனர் [3]

Remove ads

வடிவப்பண்புகள்

இது ஒரு சிறிய வகை முள்ளினத்தைச் சார்ந்த மரமாகும். இது 6-9 மீ உயரமும், 15-25 செமீ விட்டமுள்ள தண்டையும் கிளைகளையும் உடைய மரமாகும். இலைகள் இருச்சிறகுகள் தோற்றமும்,சிற்றிலைகள் நீண்டும் காணப்படும். மலர்கள் மஞ்சள் நிறத்திலும், நல்ல மணமிக்கதாகவும் இருக்கின்றன [4].

மருத்துவப் பண்புகள்

  • இம்மரப்பட்டை கலந்த நீரைப்பருகுவதால் சிறுநீரகக் கோளாறுகள், மூலநோய், இரத்த சுத்திகரிப்பு, கொழுப்பினால் ஏற்படும் நோய்கள் குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மரக்கட்டைத் தூளை பயன்படுத்தி மிகச்சிறந்த தண்ணீர் சுத்திகரிப்பானாக கேரள மாநிலத்தில் 95% வீட்டிலும் உணவகத்திலும் தினமும் குடிதண்ணீர் சுத்திகரிக்கப் படுகிறது அரிய மருத்துவ குணமிக்க இம்மரத்திலிருந்ந்து தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளால் குறிப்பிட்ட வகையான கேன்சர் குணமாகிறது.
  • சர்கரை நோய், வயிறு சம்மந்தமான நோய்களுக்குச் சரியான பலனளிக்கின்றது. சரும நோய்சரியாகிறது.
  • இந்திய மருத்துவத்தில் பயன்படும் 'லூக்கோல்' என்னும் மருந்தில் பதிமுகம் பயன் படுத்தப்படுகின்றது. இது கற்பப்பையினுள் கருவி மூலம் சோதனை செய்யும் போது உதிரம் கொட்டுதல் போன்றவற்றை மட்டுப் படுத்திகிறது. இலைகளினின்று பிரித் தெடுக்கப்படும் எண்ணெய் பாக்டீரியா, பூஞ்சாணம், போன்றவற்றிக்கு எதிராகப்பயன் படுகின்றது. மிக அதிக அளவில் கரியமில வளியை உறிஞ்சுவதுடன் மிகக் கூடிய அளவில் உயிர்வளியை வெளிப்படுத்தி சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கிறது. மழை வளத்தைத்தூண்டுகிறது.
Remove ads

பிற சிறப்புகள்

  • பூ, இலைகள், ஒப்பனை அழகு சாதனப் பொருட்களாகும். இயற்கையான நிறமேற்றுப் பொருளுக்கான 'பிரேசிலின்' என்ற சிவப்பு நிறச் சாயம் காற்றில் உள்ள உயிர்வளியுடன் சேரும் போது 'பிரேசிலியன்' வண்ணமாக மாறுகின்றது. இச்சாயம் நீர், வெளிச்சம் மற்றும் வெப்பத்தால் பாதிப் படையாத, அறிப் புண்டாக்காத முகப் பூச்சுக்கள் தயாரிப்பில் பயன் படுகிறது. முதிர்ந்த மரத்தின் மையப்பகுதியினின்று பெறப்படும் சாயம் தோல்,பட்டு, பருத்தியிழை, கம்பளி, நார், காலிகோ, அச்சுத்தொழில், மரச்சாமான்கள் வீட்டுத்தரை, சிறகு, மருந்துகள் மற்றும் பல்வேறுபட்ட கைவினைப் பொருட்களை வண்ண மூட்டப் பயன் படுத்தப் படுகிறது. பத்தமடை கோரைப் பாய்கள் பதிமுக வண்ணத்தால் சாயமூட்டப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பதிமுக சாயம் 'கயா' என்னும்மரச் சாயமுடன் கலக்கும் போது கறுப்பு, ஊதா மற்றும் சிகப்பு வண்ணச் சாயங்கள் உருவாக்கப் பட்டு அவை பனைஒலை, மற்றும் தாழை, கைவினைப் பொருட்களை வண்ணமூட்டப் பயன்படுத்தப்படுகிறது.[5]

மேற்கோள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads