பந்திங் மருத்துவமனை

From Wikipedia, the free encyclopedia

பந்திங் மருத்துவமனைmap
Remove ads

பந்திங் மருத்துவமனை (மலாய்: Hospital Banting; ஆங்கிலம்: Banting Hospital) என்பது மலேசியா, சிலாங்கூர், கோலா லங்காட் மாவட்டம், பந்திங் நகர்ப் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை ஆகும்.[2]

விரைவான உண்மைகள் அமைவிடம், ஆள்கூறுகள் ...
Thumb
பந்திங் மருத்துவமனை அமைவிடம்

இந்த மருத்துவமனை 1975-ஆம் ஆண்டு பிப்ரவரி 6-ஆம் தேதி சிலாங்கூர் சுல்தான் சலாவுதீன் அப்துல் அசீஸ் சா அவர்களால் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது. 10.48 எக்டர் பரப்பளவு கொண்ட இந்த மருத்துவமனையின் கட்டுமானச் செலவு RM 32 மில்லியன் மலேசிய ரிங்கிட் ஆகும்.

Remove ads

பொது

1991-ஆம் ஆண்டில், புதிதாக ஆண் நோயாளிகள் தங்கு கூடம் (வார்டு); அறுவை சிகிச்சை மற்றும் எலும்பியல் சிகிச்சைத் தங்கு கூடம்; 2000-ஆம் ஆண்டில், இரத்தச் சுத்திகரிப்பு பிரிவு; நிர்வாக வளாகம், மருத்துவப் பதிவுகள் பிரிவு மற்றும் உடலியல் மருத்துவப் பிரிவு ஆகியவை நிறுவப்பட்டன. 2005-இல், முதியோர்களுக்கு என தனிப் பிரிவும் நிறுவப்பட்டது.

8-ஆவது மலேசியத் திட்டத்தின் (RMK8) கீழ், தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) கட்டி முடிக்கப்பட்டது. பணியாளர்களுக்கு 18 குடியிருப்பு மனைகளும்; மருத்துவர்களுக்கு 6 மனைகளும் கட்டப்பட்டன. டிசம்பர் 2008-இல், பந்திங் மருத்துவமனையில் 6 நோயாளிகள் தங்கு கூடங்கள்; 151 படுக்கைகள் இருந்தன. அக்டோபர் 2009-இல், இருதய தீவிரச் சிகிச்சைப் பிரிவு திறக்கப்பட்டது. தற்போது 153 படுக்கைகளுடன் சேவையில் உள்ளது.

Remove ads

உள்ளமைவு

  • 153 படுக்கைகள் - (Beds)
  • 2 அறுவை சிகிச்சை அரங்குகள் - (Operating Theaters)
  • 1 முதியவர் தீவிரச் சிகிச்சை படுக்கைகள் - (Adult Intensive Care Unit Beds)
  • 4 இதய சிகிச்சை படுக்கைகள் - (Cardiac Care Unit Beds)
  • 4 குழந்தை தீவிரச் சிகிச்சை படுக்கைகள் - (Pediatric Intensive Care Unit Beds)

முகவரி

Hospital Banting, Jalan Sultan Alam Shah
42700 Banting, Selangor
Tel : +603 3187 1333
Faks : +603 3181 8834
Emel: pengurusanhospitalbanting@moh.gov.my
இணையத் தளம்: jknselangor.moh.gov.my/hbanting/

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads