பனகல் பூங்கா மெட்றோ நிலையம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பனகல் பூங்கா மெற்றோ நிலையம் (Panagal Park metro station) என்பது இந்தியாவின் சென்னையில் உள்ள சென்னை மெட்ரோவின் மஞ்சள் பாதையின் கிழக்கு-மேற்கு வழித்தடத்தில் வரவிருக்கும் ஒரு நிலத்தடி மெட்றோ நிலையமாகும். இந்த மெட்றோ நிலையம், சென்னை மெட்றோவின் பூந்தமல்லி புறவழிச்சாலை மெற்றோ - கலங்கரைவிளக்கம் மெற்றோ நிலைய தாழ்வாரம் 4இன் 30 நிலையங்களிலும், தாழ்வாரம் 4இல் உள்ள 12 நிலத்தடி நிலையங்களிலும் ஒன்றாக இருக்கும். இந்த மெட்றோ நிலையம் மார்ச் 2027இல் திறக்கப்பட உள்ளது.[1][2]

விரைவான உண்மைகள் Panagal Park, பொது தகவல்கள் ...
Remove ads

வரலாறு

பிப்ரவரி 2021இல், சென்னை மெட்றோ தொடருந்து நிறுவனம், கோடம்பாக்கம் மேம்பாலம் முதல் போட் கிளப் வரையிலான நிலத்தடிப் பிரிவில் அமைந்துள்ள இந்த பனகல் பார்க் மெட்றோ நிலையத்தின் கட்டுமானத்திற்கான ஏலங்களை அழைத்தது, இது சென்னை மெட்ரோ வலையமைப்பின் 2ஆம் கட்டத்தின் கீழ் தாழ்வாரம் 4இன் ஒரு பகுதியாகும்.[3]

இந்த மெட்றோ நிலையத்தைத் தவிர, இந்த தொகுப்பில் கோடம்பாக்கம் மேம்பாலம், கோடம்பாக்கம், நந்தனம், போட் கிளப் ஆகிய நான்கு நிலையங்களும் அடங்கும். ஐடிடி சிமென்டேஷன் இந்தியா லிமிடெட், லார்சன் & டூப்ரோ (எல் அண்ட் டி), குலேர்மாக், சாங்காய் டன்னல் இன்ஜினியரிங் கோ. லிமிடெட் (எஸ்.டி.இ.சி), ஜே குமார் இன்ஃப்ராபிராஜெக்ட்ஸ் - படேல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஆகியவற்றின் கூட்டு முயற்சியான ஏலதாரர்களின் குழுவும் இந்த தொகுப்பில் பங்கேற்றன.

மதிப்பீட்டின் பேரில், ஐடிடி சிமென்டேஷன் இந்தியா லிமிடெட், தொழில்நுட்ப மற்றும் நிதி விதிமுறைகளில் மிகவும் சாதகமான ஏலத்தை சமர்ப்பித்தது. இதன் விளைவாக ஒப்பந்தம் வழங்கப்பட்டது.[4] இவர்கள் அங்கீகரிக்கப்பட்ட செயல்படுத்தல் கட்டமைப்பின்படி நிலத்தடி கட்டுமானத்தைத் தொடங்கினர். இது தாழ்வாரம் 4இன் முன்னேற்றத்தில் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கிறது.[5]

Remove ads

நிலைய அமைப்பு

மேலதிகத் தகவல்கள் பனகல் பூங்கா தட வரைபடம் (TBC) ...
தெரு நிலை வெளியேறு/நுழைவு
எல் 1 இடைமாடி கட்டணக் கட்டுப்பாடு, நிலைய முகவர், பயணச்சீட்டு/பயணச்சீட்டு வில்லை, கடைகள்
எல்2 தளம் #



கிழக்கு நோக்கி
→ கலங்கரைவிளக்கம் நோக்கி

அடுத்த நிலையம்: நந்தனம் நீல வழித்தடம் அடுத்த நிலையத்தில் மாற்றம்

தீவு மேடை | வலதுபுறம் கதவுகள் திறக்கும்.ஊனமுற்றவர் அணுகல்
தளம் #



மேற்கு நோக்கி
நோக்கி ←பூந்தமல்லி புறவழிச்சாலை **

அடுத்த நிலையம்: கோடம்பாக்கம்

எல்2 குறிப்பு: ** (எதிர்காலத்தில் பரந்தூர் வானூர்தி நிலையம் நீட்டிப்பு)
Remove ads

நுழைவு/வெளியேறு

சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்டத்தில் கட்டப்படும் மிகப்பெரிய மெட்றோ நிலையமாக பனகல் பூங்கா மெட்றோ நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.[6] தியாகராயநகரின் வணிக மையத்தில் கூட்டத்திற்கு சேவை செய்ய இது 5 நுழைவு/வெளியேறும் இடங்களைக் கொண்டிருக்கும்.[7]

  • சிவஞானம் தெரு, பிஞ்சல சுப்ரமணியம் தெரு, பிரகாசம் தெரு, பாஷ்யம் தெரு மற்றும் நாகேசுவரன் சாலை ஆகிய 5 நுழைவுப் புள்ளிகள் திட்டமிடப்பட்டுள்ளன.[8]

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads