பன்னிரண்டாம் கிரகோரி (திருத்தந்தை)

From Wikipedia, the free encyclopedia

பன்னிரண்டாம் கிரகோரி (திருத்தந்தை)
Remove ads

திருத்தந்தை பன்னிரண்டாம் கிரகோரி (இலத்தீன்: Gregorius XII; c. 1326 – 18 அக்டோபர் 1417), இயற்பெயர் ஆஞ்சலோ கொரேர், கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 30 நவம்பர் 1406 முதல் ஜூலை 1415 வரை இருந்தவர் ஆவார். இவருக்கு முன் ஏழாம் இன்னசெண்ட் திருத்தந்தையாக இருந்தார். காண்ஸ்தான்சு பொதுச்சங்கத்தின் பரிந்துரையின்படி மேற்கு சமயப்பிளவினை முடிவுக்கு கொண்டுவர இவர் பதவி விலகினார். இவருக்குப்பின் திருத்தந்தை ஐந்தாம் மார்ட்டின் திருத்தந்தையாக தேர்வானார்.

விரைவான உண்மைகள் திருத்தந்தை பன்னிரண்டாம் கிரகோரி, ஆட்சி துவக்கம் ...
Thumb
திருத்தந்தை பன்னிரண்டாம் கிரகோரி

ஆஞ்சலோ கொரேர் வெனிசின் காஸ்தெல்லோவின் ஆயராக 1380இல் நியமிக்கப்படார். 1 டிசம்பர் 1390இல் காண்ஸ்தான்தினோபிளின் பட்டம் சார்ந்த மறைமுதுவராக நியமிக்கப்படார். 12 ஜூன் 1405இல் திருத்தந்தை ஏழாம் இன்னசெண்டால் கர்தினாலாக உயர்த்தப்பட்ட இவர் காண்ஸ்தான்தினோபிளின் திருத்தூதரக மேளாலராக 30 நவம்பர் 1406 முதல் 23 அக்டோபர் 1409 வரை பணியாற்றினார்.[1] 1406இல் நடந்த திருத்தந்தைத் தேர்தலில், அமைதி ஏற்பட எதிர்-திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் பதவி விலகி, புதிய தேர்தலுக்கு சம்மதித்தால் தாமும் பதவி விலகுவதாக அளித்த உறுதிமொழியின்பேரில் இவர் திருத்தந்தையாக தேர்வானார்.

காண்ஸ்தான்சு பொதுச்சங்கத்தின் பரிந்துரையின்பேரில் இவர் பதவி விலகினார். அச்சங்கம் இவருக்கு போர்தோவின் கர்தினால் ஆயர் என்னும் பட்டம் அளித்தது. இவர் இறக்கும்வரை அடுத்த திருத்தந்தை தேர்வாகவில்லை என்பது குறிக்கத்தக்கது. பதவி விலகளுக்குப்பின்பு மறைந்த வாழ்வு வாழ்ந்தார். 28 பெப்ரவரி 2013இல் பதினாறாம் பெனடிக்டின் பணி துறப்புக்கு முன்பு கடைசியாக பணி துறந்த திருத்தந்தை இவர் ஆவார்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads