பர்சப்பாரா அரங்கம்
துடுப்பாட்ட அரங்கம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பர்சப்பரா துடுப்பாட்ட அரங்கம் (Barsapara cricket stadium), அலுவல்முறையாக டாக்டர். பூபன் ஹசாரிகா துடுப்பாட்ட அரங்கம் என்றும் சுருக்கமாக அசாம் துடுப்பாட்டக் கூட்டமைப்பு அரங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் அசாம், குவாகாத்தி, பார்சபராவில் உள்ள ஒரு துடுப்பாட்ட மைதானமாகும்.[1] முழு அரங்கத் திட்டத்தின் விலை மதிப்பு ரூ .2300 கோடியாகும். இதை 10 அக்டோபர் 2017 அன்று அசாம் முதல்வர் சர்பானந்த சோனாவால் திறந்து வைத்தார். பார்சபரா கிரிக்கெட் மைதானம் இந்தியாவின் 49ஆவது பன்னாட்டுத் துடுப்பாட்ட நிகழ்விடமாகும்.[2] இங்கு நடைபெற்ற முதல் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடந்த இ20ப போட்டியாகும். இது உள்நாட்டு மற்றும் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளை நடத்துகிறது.[3]
2010 ஆம் ஆண்டில், அசாம் துடுப்பாட்டக் கூட்டமைப்பானது, மறைந்த டாக்டர். பூபன் ஹசாரிகாவின் நினைவாக அரங்கத்தின் பெயரை மாற்றியது.[4] வடகிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு அரங்கம் பார்சபரா அரங்கமாகும்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads