பர்மிய இந்தியர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பர்மாவில் வசிக்கும் இந்திய துணைக்கண்டத்தின் மக்கள் பர்மிய இந்தியர் (மியான்மர் இந்தியர்) ஆவர். பல நூற்றாண்டுகளாக இந்தியர்கள் பர்மாவில் வசித்து வந்தாலும், பெரும்பான்மையினர் பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் சென்று குடியேறியவர்கள். ஏறத்தாழ ஒன்பது இலட்சம் இந்தியர்கள் பர்மாவில் வசிப்பதாகக் கூறப்படுகிறது. இவர்களில் பலர் ரங்கூன், மாண்டலே ஆகிய இருநகரங்களிலேயே வாழ்கிறார்கள். அரசு, இராணுவப் பணிகளில் இந்தியர்கள் அதிகளவில் பணியாற்றினார்கள். இரண்டாம் உலகப் போர் காலத்தில் ரங்கூனில் இந்தியர்களே அதிகளவில் வசித்தனர். பல தொழில்களில் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இவர்களில் தமிழர், இந்திக்காரர்கள், வங்காளிகள், பஞ்சாபியர்கள், குசராத்தியர்கள் ஆகியோர் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். பர்மா அரசு இந்திய மொழிகளுக்குத் தடை விதித்ததால், பெரும்பாலான இந்தியர்கள் பர்மிய நீரோட்டத்தில் கலந்து விட்டார்கள். இருப்பினும் பலர் தங்கள் குடும்பப் பெயர்களைச் சூட்டிக் கொண்டும், தம் பண்பாட்டைப் பேணியும், இந்திய மொழிகளைப் பேசியும் வாழ்கின்றனர்.

Remove ads
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads