பளிங்குக்கல் பாறைகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பளிங்குக்கல் பாறைகள் அல்லது சலவைக்கல் பாறைகள் (Marble Rocks) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் மாவட்டத்தின் தலைமையிட நகரமான ஜபல்பூர் நகரத்தின் அருகில் உள்ள பேடாகாட் எனுமிடத்தில் அமைந்துள்ளது.[1]
இங்கு பாயும் நர்மதை ஆறு இப்பகுதியில் உள்ள பாறைகளை குடைந்து சென்று மூன்று கிலோ மீட்டர் நீளத்திற்கு சலவைக்கல் பாறைகளை இயற்கையாக உண்டாக்கியது. இந்த பளிங்குக்கல் பாறைகளின் பள்ளத்தாக்கு வழியாக செல்லும் நர்மதை ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் படகுச் சவாரி செல்கின்கின்றனர்.[2] மேலும் பளிங்குக்கல்லால் ஆன பாறையில் துயாந்தர் அருவி உள்ளது. எனவே சலைவைக்கல் பாறைகள் ஒரு சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இச்சலவைக்கல் பாறைகள் சிற்பங்கள் செய்தவதற்கு வெட்டி எடுக்கப்படுகிறது.
Remove ads
படத்தொகுப்பு
- துயாந்தர் அருவி
- பளிங்குக்கல் பாறைகளை ஒட்டிச் செல்லும் நர்மதை ஆறு
- ஜபல்பூர் அருகே பேடாகாட்டில் நர்மதை ஆறு பளிங்குக்கல் பாறைகளை கடந்து செல்லும் காட்சி
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
