பாடலாத்ரி நரசிம்மர் கோயில்
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு பெருமாள் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாடலாத்ரி கோயில் அல்லது பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சிங்கபெருமாள்கோவில் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.
Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 85 மீட்டர் உயரத்தில், 12.760345°N 80.004855°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் அமைந்துள்ளது.
கட்டிடக்கலை
இக்கோயிலின் மூலவர் நரசிம்மர் (விஷ்ணு); மற்றும் தாயார் அகோபில வல்லி (இலட்சுமி) ஆவர். பல்லவர் கட்டிடக்கலை முறையில் கட்டப்பட்ட இந்த நரசிம்மர் கோயில் (சிங்கபெருமாள் கோவில் எனவும் அழைக்கப்படுகிறது) தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில், சிங்கபெருமாள்கோவிலில் அமைந்துள்ள விஷ்ணு கோயில் ஆகும். நரசிம்மர் மற்றும் அகோபில வல்லி எனும் லட்சுமிக்கு கட்டபட்ட இக்கோயிலில், கல் வெட்டுகள் உள்ளன. இ்க்கோயில் 8ஆம் நூற்றாண்டில் பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்டது ஆகும்.
Remove ads
கோயில் நேரம்
இக்கோயில், காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், பின்னர் மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும். இங்கு நான்கு கால பூசை நடைபெறுகின்றது.
திருவிழாக்கள்
ஏப்ரல்-மே மாதங்களில் சித்திரைத் தேரோட்டமும், நரசிம்ம ஜெயந்தி, பவித்ர உற்சவம், ஆனி (ஜூன்-ஜூலை) மற்றும் மாசி மாத திருவிழா (பிப்ரவரி -மார்ச் மாதங்களில்) ஆகிய முக்கிய விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன.
பராமரிப்பு
இந்தக் கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.
தொன்மம்
இந்து தொன்மங்களின் படி, இக்கோயில் பிரம்மாண்ட புராணத்தில் கோயில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விடத்தில் விஷ்ணு நரசிம்ம அவதாரதில் காட்சி தருகிறார். பிரம்மனிடம் வரம் பெற்ற இரண்யகசிபு, தேவர்களை தொந்தரவு செய்தான். தானே கடவுள் தன்னையே அனைவரும் வணங்கவேண்டும் என்று கட்டளை இட்டான். அவனது மகனான பிரகலாதன், விஷ்ணுவின் தீவிர பக்தராக இருந்தான். இது இரண்யகசிபுவிற்கு வருத்தத்தை அளித்தது. அவர் பிரகலாதனை தன் வழிக்கு கொண்டுவ முயன்று அதில் தோல்வியடைந்தான். இறுதியில் தன் மகனை பல்வேறு வழிகளில் கொல்ல முயன்றான். ஆனால் விஷ்ணு தன் தெய்வீக ஆற்றலால் பிரகலாதனைக் காப்பாற்றினார். இறுதியில் விஷ்ணு, நரசிம்ம அவதாரம் எடுத்து, தூணிலிருந்து தோன்றினார். நரசிம்மர் சிங்க முகமும் மனித உடலும் கொண்ட வடிவத்தில் இருந்தார். இரண்யகசிபு ஒரு மாலை நேரத்தில் நரசிம்மரின் மடியில் வைத்துக் கொல்லப்பட்டான். அது நிலமும் அல்ல வானமும் அல்ல. அவனைக் கொன்றது மனிதனும் அல்ல மிருகமும் அல்ல. அவனைக் கொன்றும் கூட அவருடைய கோபம் தணியவில்லை, ஆனால் பிரகலாதன், நரசிம்மரை சமாதானப்படுத்த முயன்றான்.[1] இக்கோவிலில் உள்ள குளத்தில் குளித்து நரசிம்மர் தன் கோபத்தைத் தணித்துக் கொண்டரார் எனப்படுகிறது. அதன் காரணமாக இந்தத் தீர்த்தம் சிவப்பு நிறமானதாக கூறப்படுகிறது.[2]
Remove ads
வரலாறு
சிங்கபெருமாள் கோயில், முதலில் ஆழ்வார் நரசிங்கத்தேவர், நரசிங்க விண்ணகர் ஆழ்வார் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது. மூலக் கோயில் பல்லவர்களின் குடைவரை கட்டிடக்கலையில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இப்பகுதியில் இதே போன்ற குகைக் கோயில்கள் அவர்களால் கட்டப்பட்டுள்ளன.[3] கோயிலின் சுவர்களில் உள்ள கல்வெட்டுகள் 10-11 ஆம் நூற்றாண்டின் சோழ ஆட்சி காவத்தையாக உள்ளன. கல்வெட்டுகள் தெலுங்கு[4], கிரந்தம்[4], தமிழ் போன்ற மொழிகளில் செதுக்கப்பட்டுள்ளன. கி.பி 990 இல் தஞ்சாவூரில் இருந்து ஆண்ட மிகவும் பிரபலமான சோழ பேரரசரான ராஜ ராஜ சோழன் (கி.பி 985-1014) காலத்திய மிகப் பழமையான கல்வெட்டு, கோயிலின் நொந்தா விளக்கு எரிக்க தேவைப்படும் நெய்யிக்காக 26 ஆடுகளை கொடையாக வழங்கியதைக் குறிக்கிறது. ஆண்டாள் சன்னதியில் உள்ள மற்றொரு கல்வெட்டு சிதைந்துள்ளது, ஆனால் ஒரு அது வருவர் முதன்மைத் தெய்வத்திற்கு அளித்த கொடையைக் குறிக்கிறது. மூன்றாவது கல்வெட்டும் சிதைந்துள்ளது, அநேகமாக அது 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது, கோயிலுக்கு அளித்த கொடைகளைக் குறிக்கிறது.[1]
Remove ads
கட்டக்கலை
இந்தக் கோவில் குடைவரை கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளது. 1.5 ஏக்கர் (0.61 ஹெக்டேர்) பரப்பளவில் உள்ளது. இரண்டு வளாகங்களைக் கொண்டுள்ளது. இது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இருந்து 45 கி.மீ. (28 மைல்) தொலைவில் உள்ள சிங்கபெருமாள்கோவில் நகரில் அமைந்துள்ளது. ஒரு குகையின் கருவறையில் அமைந்திருக்கும் மூலவர், வலது காலை வளைத்து இடது காலை தொங்கவிட்ட நிலையில் அமர்ந்த நிலையில் இருக்கிறார். நரசிம்மருக்கு நான்கு கைகள் உள்ளன. பின்னிரு கைகளில் சங்கு, சக்ரத்தை ஏந்தியுள்ளார். மின்னிரு கைகளில் ஒன்றை அபய முத்திரை காட்டியபடியும், இன்னொரு கையை தன் மடியில் வைத்திருக்கிறார். நரசிம்மருக்கு மூன்றாவது கண்ணாக நெற்றிக்கண் உள்ளது. இது பொதுவாக சிவனுக்கு உள்ள அம்சமாகும். சன்னதியின் இரண்டு பக்கங்களிலும் இரு துவாரபாலகர் உருவங்கள் காணப்படுகின்றன. தாயார் அலோபிகவல்லி இரண்டாவது வளாகத்தில் அமர்ந்துள்ளார். இது பின்னர் கூடுதலாக கட்டப்பட்டது உள்ளது என நம்பப்படுகிறது. சன்னதிக்கு வலதுபுறம் ஆண்டாள் சன்னதி ஒன்று உள்ளது. அலோபிகவல்லி மற்றும் ஆண்டாள் ஆகிய இரண்டு சன்னதிகளிலும் நரசிம்மர் கோவிலில் இருந்ததைப் போலலாமல் தனி வளாகங்கள் உள்ளன.[5]
சிற்றாலயத்தில் உள்ள கருடன் நரசிம்மரை நோக்கியவாறு உள்ளார். மகாமண்டபம், அலங்காரமண்டபம், குறுகிய அர்த்த மண்டபம் ஆகியவற்றைக் கடந்து கருவறை அமைந்துள்ளது. கொடிமரம், கருடர் சன்னதி முன்னால் அமைந்துள்ளது.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads